பிரான்சில் கொரோனாவின் 4வது அலையானது மிக மோசமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சுகாதார அனுமதி சான்றிதழ் கட்டாயம் என்று அரசு சட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த Pass Sanitaire சட்டமானது கட்டாயம் என தகவல்கள் வெளியாகி அதனை சுகாதாரத்துறை அமைச்சரும் உறுதிப்படுத்தினார்.
இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுதும் பொதுமக்கள் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரசில் நேற்று ஏறத்தாழ 11,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர் எனவும் நாடு முழுதும் 1,60,000 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட 160க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டமும் சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறிய நிலையில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் திரளாக கலந்துகொண்டு போராட்ட களத்தில் சட்டத்துக்கு எதிராக போராடி வருகிறார்கள்.
தலைநகரில் உள்ள சில பகுதிகளிலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் நாடு முழுவதுமே பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.