இந்த அவருடன் சிங்கப்பூர் சுதந்திர நாடாக மாறி 59 வருடங்கள் ஆகிறது. இதற்கான அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் வருகிற ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் நமது தமிழ் சாகா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
https://tamilsaaga.com/sg/events-in-ndp-on-national-day/
National Day Parade- ஐத் தொடர்ந்து PA எனப்படும் Public Association, NDP-உடன் இணைந்து Heart Land கொண்டாட்டத்தை நடத்தவுள்ளது. ஜூலை 11-ம் தேதி PA வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த கொண்டாத்திற்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி நடக்கவுள்ள இந்த கொண்டாட்டம் மொத்தம் ஐந்து இடங்களில் நடக்கவுள்ளது. அனைத்து இடங்களுக்கும் வெவ்வேறான கருப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. ராணுவ வாகங்களின் கண்காட்சி, வாணவேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மேலும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற விதவிதமான ஆக்ட்டிவிட்டி-கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Bishan, Punggol, Yishun, Paya Lebar, and Buona Vista போன்ற 5 வெவேறு இடங்களில் இது நடைபெறுகிறது.
Bishan – “Unity in Diversity” என்ற தீம் கொண்டு Bishan Circle Line MRT Station-க்கு எதிரில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைபேறவுள்ளது. (Central district)
Punggol – “One HOME” என்ற தீம் கொண்டு Waterway Point (North East district)-க்கு அருகில் உள்ள Punggol திறந்தவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Yishun – “Moving Forward, Cherishing our Past” Yishun (North West district)-ல் உள்ள FutsalArena திறந்தவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Paya Lebar– “Lights Up, Power Up” Paya Lebar Quarter 1 (South East district)-ல் உள்ள திறந்தவெளியில் நடைபெறவுள்ளது.
Buona Vista – “Hearts ToGather” Buona Vista MRT Station (South West district)-க்கு அடுத்து உள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கொண்டாட்டத்தில் பங்குகொள்ள டிக்கெட் அவசியம். இந்த டிக்கெட்டுகள் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள Community Club-களில் வழங்கப்படுகிறது. ஒருவருக்கு அதிகபட்சம் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
ஜூலை 12-ம் தேதி முதல் இந்த டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுவருகிறது.
இந்த கொண்டாட்டாட்டம் குறித்து மேலும் அறிந்துகொள்ள https://www.ndp.gov.sg/ndp-heartlands/ இந்த லிங்க்-கை கிளிக் செய்யவும்.
மேலும் எந்தெந்த பகுதியில் உங்களுக்கான டிக்கெட்டை பெற முடியும் என்பதை குறித்த தகவலுக்கு இந்த லிங்க்-கைக் க்ளிக் செய்யவும்!
https://www.ndp.gov.sg/files/NDP_2024_Heartland_Celebrations_Ticket_Collection_Points.pdf