அண்மையில் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்தது 2020ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள். நோய் பரவல் காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. இந்நிலையில் நாளை ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி வரை டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 4000 போட்டியாளர்கள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போட்டிகளுக்கும் தொற்று அச்சம் காரணமாக பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளில் நமது சிங்கப்பூர் அணியும் ஆறு விளையாட்டுகளில் 10 விளையாட்டு வீரர்களை களமிறங்குகிறது. பாராலிம்பிக்கின் சென்ற பதிப்பில் இதே அளவிலான வீரர் வீராங்கனைகள் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 10 வீரர்களில் நான்கு பேர் இந்த ஆண்டு தான் அறிமுகமாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ நாட்டில் நடக்கவுள்ள பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சிங்கப்பூர் வீரர்கள் 10 பேர் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நீச்சல் போட்டியில் உலக அளவில் சாதனை படைத்த இப் பின் க்ஸியுவும் அந்த 6 பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல உடற்குறையுள்ளோர் அம்பு எய்தல் போட்டியில் தற்போது உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நூர் ஆலிம்வும் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளார்.
குதிரையேற்ற போட்டியிலும் பலர் சிங்கப்பூர் சார்பாக கலந்துகொள்ள உள்ளனர். 24 ஆகஸ்ட் 2021ல் தொடங்கி இந்த பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 5 2021 ஆண்டு முடிவடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது.