TamilSaaga

சிங்கப்பூர், மலேசியா : விரைவில் தொடங்குகிறது இருவழி நில VTL சேவை – MTI அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காஸ்வே வழியாக சிங்கப்பூர்-மலேசியா தடுப்பூசி பயணப் பாதை (VTL) விரிவுபடுத்தப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையே அதிகமான மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் டிசம்பர் 20 முதல், சிங்கப்பூர் குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய முடியும் அதேபோல மலேசிய குடிமக்கள் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : புலம்பெயர்ந்த தொழிலாளி பரிதாப பலி

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தற்போதைய சோதனை நெறிமுறைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று MTI மேலும் கூறியது. சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் நடைமுறையில் உள்ள சோதனை நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட வேண்டும், இதில் வருகைக்குப் பிந்தைய 7-நாள் ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) சோதனையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே நில VTL-ன் முதல் கட்டம் கடந்த மாத இறுதியில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நாளில் சாங்கி விமான நிலையம் மற்றும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு இடையேயான விமான VTL தொடங்கியது. காஸ்வேயின் குறுக்கே தினமும் 32 பேருந்துகள் செயல்படுத்தப்படுகின்றன. பேருந்துகள் ஒரு பயணத்திற்கு அதிகபட்சமாக 45 “முழுமையாக அமர்ந்து” பயணிக்கும் திறன் கொண்டவை. அதாவது நில VTL திட்டத்திற்கான தினசரி ஒதுக்கீடு என்பது ஒருவழியில் 1400 பயணிகள் மற்றும் மொத்தம் 2,900 பயணிகள் ஆகும்.

இந்த நியமிக்கப்பட்ட சேவைகள் இரண்டு நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. Transtar Travel என்ற நிறுவனம் 32 தினசரி நியமிக்கப்பட்ட பயணங்களை இயக்குகிறது – மலேசியாவில் இருந்து 16 பயணங்கள் மற்றும் சிங்கப்பூரில் இருந்து 16 பயணங்கள் ஆகும். சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் தற்காலிக பேருந்து பரிமாற்றம் மற்றும் ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் சென்ட்ரல் பேருந்து முனையம் இடையே இயக்குகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts