TamilSaaga

சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் இடியுடன் கூடிய மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

சிங்கப்பூரில் இந்த ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் சிங்கப்பூர் மிகவும் அதிகமான ஈரமான நாட்களை எதிர்கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 16) பதினைந்து நாள் முன்னறிவிப்பில் கூறியது. மேலும் சிங்கப்பூரில் தினசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகக் குறையும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் குறுகிய இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் தென்மேற்கு பருவமழை நிலை நீடிப்பதால் சில நாட்களில் மாலை வரை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இப்பகுதியில் பெரிய அளவில் காற்று வீசுவதால் ஒரு சில நாட்களில் பரவலாக மற்றும் மிதமான கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக, மாதத்தின் மொத்த மழைப்பொழிவு தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் எதிர்பார்த்த மழை இருந்தாலும், தினசரி அதிகபட்ச வெப்பநிலை இன்னும் சில நாட்களில் சுமார் 34 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும். தினசரி வானிலை வரம்பு 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில சமயம் இரவு நேரங்களில் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும், குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் இது காணப்படும்.

Related posts