சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் திரு தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் தமது சின்னமாக அன்னாசி பழத்தினை தேர்ந்தெடுத்துள்ளார். நிலையில் அவர் அன்னாசி பழத்தினை எதற்காக தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி தொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அதற்கான பதிலினை அளித்துள்ளார். இது குறித்த அவர் தெரிவித்த பொழுது, என்ன சின்னத்தை தேர்ந்தெடுக்கலாம் என்று எல்லா வயதை சேர்ந்த நபர்களிடமும் கருத்துக்களை கேட்டு பின்பு முடிவெடுத்ததாக தெரிவித்தார்.
முதலில் துரியான் பழத்தினை தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்ததாகவும், அதற்கு பின்பு சட்டென்று முடிவெடுத்து 10 வினாடிகளில் அன்னாசி பழத்தை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அன்னாசி பழமானது எல்லா வயதில் உள்ளவர்களுக்கும் பிடித்தமான பழம் என்றும், மேலும் அனைவரும் புரிந்து கொள்ளவும் சுலபமாக இருக்கும் என்ற காரணத்தினால் அதை தேர்ந்தெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுவதை ஒட்டி, சிங்கப்பூரின் அனைத்து பகுதிகளிலும் பிரச்சார சுவரொட்டிகள் காணப்படுகின்றன. பிரச்சார சுவரொட்டியில் திரு தர்மன் அவர்களின் அன்னாசி பழ சின்னமானது பளிச்சென்று கண்ணில் பட்ட காரணத்தினால் செய்தியாளர்கள் இந்த கேள்வியை அவர் அவரிடம் கேட்டுள்ளனர். அதனால் இந்த சுவாரசிய தகவலும் நமக்கு கிடைத்துள்ளது.