TamilSaaga

“சிங்கப்பூரில் செப்டம்பர் 14 முதல் முதியவர்கள் மூன்றாவது தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம்” – MOH

சிங்கப்பூரில் கோவிட் -19 தடுப்பூசி பூஸ்டர் ஷாட்களை மிதமாக அல்லது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கும், மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்களுக்கும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் கோவிட் -19 தடுப்பூசி குறித்த நிபுணர் குழு, பூஸ்டர் ஷாட்களின் தேவையை மதிப்பீடு செய்துள்ளன என்று கோவிட் -19 பணிக்குழுவின் இணைத் தலைவர் கான் கிம் யோங் கடந்த வெள்ளிக்கிழமை (செப் 3) தெரிவித்தார்.

கிடைக்கக்கூடிய ஆதாரங்களை மதிப்பாய்வு செய்து, உலகளவில் நிர்வகிக்கப்படும் பூஸ்டர் டோஸின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை ஆராய்ந்து, இந்த முடிவினை குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் இந்த குழுக்கள் ஒரு பூஸ்டர் திட்டத்தை தொடங்க MOH ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் வரும் 14ம் தேதி முதல் சிங்கப்பூரில் 60வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 14ம் தேதி முதல் மக்கள் இதற்கான பதிவுகளை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts