TamilSaaga

“பரிசோதனையில் நெகடிவ் வந்தா கடையை திறக்கலாமா?” – குழப்பத்தில் ஜூரோங் கடைக்காரர்கள்

கடந்த சில தினங்களுக்கு ஜுராங் துறைமுகத்தில் COVID-19 கிளஸ்டர் தோன்றிய பின்னர் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று மீன் கடை உரிமையாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலேயும் அனைத்து மீன்பிடி சந்தைகளிலும் உள்ள மீன் பிடிப்பவர்களுக்கு கட்டாய கொரோனா சோதனை செய்யப்படும் என்று சுகாதார அமைச்சகம் கடந்த ஜூலை 17 வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மேலும் அனைத்து சந்தைகளுக்கும் சுய கொரோனா பரிசோதனை கருவி வழங்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்தது.ஜுராங் ஃபிஷர் துறைமுகத்தில் தனிநபர்களிடையே பரவிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது நினைவுகூரத்தக்கது. மேலும் வரும் ஜூலை 31ம் தேதி வரை ஜுராங் ஃபிஷர் துறைமுகம், தூய்மைப்படுத்தும் பணிக்காக மூடப்படும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில் பரிசோதனையில் நெகடிவ் என்ற முடிவுகள் வந்த கடைக்காரர்கள் தங்களுடைய கடைகளை திறக்கலாமா? என்பது குறித்து தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். மீன் விற்பனையாளர்களில் பலர் பிரபல CNA செய்தி நிறுவனத்திடம் இந்த தகவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஸ்டால் வைத்திருப்பவர்கள் CNAவிடம் “திங்கள் அல்லது செவ்வாயன்று கொரோனாவிற்கு எதிர்மறையாக சோதித்தபின்பும், அவர்கள் தங்கள் ஸ்டால்களை மீண்டும் திறக்க முடியுமா என்பது குறித்து NEA மற்றும் MOHயிடம் இருந்து எந்தவிதமான தகவலையும் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related posts