சிங்கப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) இரவு மலேசியாவிற்கு செல்லும் காஸ்வேயில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று ஒன்றுடன் மோதிய விபத்தில் நான்கு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) நேற்று இரவு 11.20 மணியளவில் இந்த விபத்து குறித்து தங்களுக்கு எச்சரிக்கப்பட்டது என்று கூறியது.
இந்த விபத்தில் காயமடைந்த நான்கு பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்குள்ளான அந்த காரின் 45 வயது ஆண் ஓட்டுநர், 26 வயதான ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவருடன் வந்த 27 வயது பெண் ஆகிய மூவரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.
இந்த விபத்தில் அருகில் சென்றுகொன்றிருந்த ஒருவரும் காயமடைந்துள்ளார், இந்த விபத்து மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள பங்குனன் சுல்தான் இஸ்கந்தர் சுங்க, குடிவரவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வளாகத்திற்கு செல்லும் காஸ்வேயில் உள்ள மூன்று பாதைகளில் இரண்டு பாதைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தது என்று ICA கூறியுள்ளது.
திங்கள்கிழமை அதிகாலை 1.42 மணியளவில், விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டதாக ICA தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான வாகனங்கள் அகற்றப்படுவதற்கு முன்பும் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவில்லை என ICA செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து விசாரணைகள் தொடர்வதாக போலீசார் தெரிவித்தனர். மலேசியாவுக்கான சிங்கப்பூரின் தரைவழிப் பாதையில் இந்த மாதத்தில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவம் இதுவாகும்.