வேலைவாய்ப்பு சட்டம் மற்றும் CPF சட்டத்தின்படி முறையே ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி புரிந்துகொள்ள பணி உரிமை முயற்சி செய்து வருகின்றது. மனிதவள அமைச்சகம் மற்றும் CPF வாரியத்தால் 2012ல் தொடங்கப்பட்டது தான் Workright என்று அழைக்கப்படும் பணி உரிமை. வேலைவாய்ப்பு சட்டம் மற்றும் சிபிஎஃப் சட்டத்துடன் விழிப்புணர்வையும் தேசிய இணக்கத்தையும் உயர்த்துவதற்கு Work Right முயல்கிறது.
சிங்கப்பூரில் நடப்பில் உள்ள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ், நீங்கள் வேலை நாளை கடந்து Over Time செய்திருந்தால் உங்கள் சம்பள காலம் முடிந்த 14 நாட்களுக்குள் உங்களுக்கு கூடுதல் நேர ஊதியம் அளிக்கப்பட வேண்டும். இது முழுநேர, பகுதிநேர, தற்காலிக அல்லது ஒப்பந்த ஊழியர்களாக இருந்தாலும், வேலைவாய்ப்பு சட்டத்தின் பகுதி IVன் கீழ் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.
மேலும் வேலைவாய்ப்பு சட்டம் விதி மீறலைப் பற்றி புகாரளிக்க தொழிலாளர்களுக்கு என்று பிரத்தியேகமாக சில தொலைபேசி எண்களும் அளிக்கப்பட்டுள்ளது. 1800 221 9922 என்ற இந்த எண்ணுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போன் செய்து புகார் அளிக்கலாம். அதே போல சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த எண்ணுக்கு அழைக்கலாம்.
ஞாயிறு மாற்று பொதுவிடுமுறை நாட்களில் இந்த சேவை மையம் திறக்கப்படமாட்டாது.