TamilSaaga

தந்தையின் இழப்பு.. 3 சகோதரிகள்.. சிங்கப்பூரில் 14 ஆண்டுகளில் 13 புரமோஷன் – அசுர உழைப்பால் இன்று தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஊழியர்

உழைப்பே உயர்வு, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், தன் கையே தனக்கு உதவி என்று பல பழமொழிகளை நாம் கேட்டிருப்போம். இந்த பழமொழிகளுக்கு சான்றாக வாழ்ந்து வரும் பலரின் வாழ்கையை பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அடிக்கடி பல வெளிநாட்டவர்களின் வெற்றி வாழக்கையை பற்றியே நாம் பலமுறை கண்டு, கேட்டிருந்தாலும் தடைகள் பல கடந்து சாதித்த தமிழர்களின் எண்ணிக்கை இங்கே பல கோடி. அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவில் காணவிற்பதும் சிங்கப்பூர் வந்து ஆண்டுகள் பல கடின உழைப்பை உரித்தாக்கி இன்று தமிழகத்தில் புகழ்பெற்ற ஏஜென்சியான நந்தனா ஏர் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனராக உயர்ந்த திரு. தயாளன் ராஜா அவர்கள் பற்றித்தான்.

“சிங்கப்பூரில் இனி ஜாலியா சைக்கிள் ஓட்டலாம்” – Round Island பொழுதுபோக்கு பாதையின் முதல் கட்டம் திறப்பு

தமிழகத்தில் உள்ள திருச்சி விமான நிலையத்தில் இருந்து நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தால் நீங்கள் நிச்சயம் நந்தனா ஏர் டிராவல்ஸ் நிறுவனத்தை பார்த்திருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. இந்த தொற்று காலத்திலும் பல பயணிகளுக்கு இன்று தேவையான ஆவணங்களுடன், முறையாக தங்கள் பயணத்தை சிக்கலின்றி மேற்கொள்ள காரணமாக இருந்து வருகின்றார் நமது நந்தனா தயாளன். ஆனால் இது வெறும் 1 ஆண்டில் பெற்ற வளர்ச்சியல்ல. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு 2005ம் ஆண்டு தான் தயாளன் ராஜா முதன்முதலில் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்துள்ளார். அன்று முதல் இன்று வரை அவரது வாழ்கை பயணம் எங்கெல்லாம் பயணித்துள்ளது என்பதை இப்பொது காணலாம்.

தயாளன் ராஜா நமது தமிழ் சாகாவிற்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்தவை..

சிங்கப்பூர் வருகை

“நான் நடுத்தர கும்பம்லாம் இல்ல, அதை விட கம்மி தான் சார். அப்பா விவசாயம் சார்ந்த தொழில், 3 சகோதரிகள்.. கையில் காசு இல்லை. அப்போது தான் வெளிநாடு செல்ல தயாரானேன்”. நான் 2005ம் ஆண்டில் தான் சார் சிங்கப்பூர் வந்தேன், ஒரு கடைநிலை ஊழியனாக மிகக்குறைந்த சம்பளத்திற்கு தான் இங்கு உழைக்க வந்தேன். சுமார் 14 ஆண்டுகள் நான் சிங்கப்பூரில் தான் தொடர்ச்சியாக பணிபுரிந்து வந்தேன். நான் நன்கு படித்திருந்த காரணத்தால் இந்த 14 ஆண்டுகளில் சுமார் 13க்கும் மேற்பட்ட பதவிஉயர்வுகளை பெற்றேன். இறுதியில் நான் சிங்கப்பூரில் இருந்து மீண்டும் தமிழகம் திரும்பியபோது தான் நாம் ஏன் சிங்கப்பூரில் சொந்த தொழில் துவங்கக்கூடாது என்று எண்ணினேன், எண்ணியதை நடத்தியும் முடித்தேன்.”

நான் சிங்கப்பூருக்குள் 2005ம் ஆண்டு நுழைந்தேன், ஆனால் சுமார் ஒரு 4 ஆண்டுகள் எந்தவித முன்னேற்றமும் எனக்கு கிடைக்கவில்லை. நான் சிங்கப்பூர் வந்த 6வது மாதத்திலேயே எனது கல்வித்தகுதிக்கு ஏற்ப ஒரு வாய்ப்பு கிடைத்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தாலும் நானும் சிங்கப்பூருக்கு புதியவன் என்பதாலும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றே கூறலாம். காலம் நகர்ந்தது ஒரு கட்டத்தில் (4 ஆண்டுகள் கழித்து) அப்போது நான் வேலைபார்த்த நிறுவனத்தின் நிறுவனரிடம் நேரடியாக பேச சென்றேன். எத்தனை ஆண்டுகள் நான் இப்படியே இருப்பது? எனது முன்னேற்றத்துக்கு என்ன நான் செய்ய வேண்டும் என்று கேட்டேன். மகிழ்ந்த என் நிறுவன தலைவர் என்னை பாராட்டி பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்”.

“என் வேலைக்கு ஏற்ப சில படிப்புகளை (Course) என் முதலாளி படிக்க சொல்ல நானும் கவனத்துடன் படித்தேன். ஆனால் உடனே எனக்கு உயர்வு கிடைத்துவிடவில்லை, இருப்பினும் எனது நேரத்திற்காக காத்திருந்தேன் வாய்ப்பு வந்தது. இனி அடுத்தகட்டத்துக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல பதவிஉயர்வுகளை பெற்றேன். ஆனால் அடுத்து என்ன என்ற அந்த தேடல் என்னிடம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்க ஒரு கட்டத்தில் வேறொரு நிறுவனத்திற்கு மாற முடிவு செய்தேன். எனது முதலாளியும் எனது எதிர்காலத்தை கருத்தில்கொண்டு என்னை அடுத்த கட்டத்திற்கு செல்ல அனுமதித்தார்.”

தேடலே எனது உயர்வின் காரணம்

தேடல் என்ற அந்த ஒரு விஷயம் என்னுள் இருந்த காரணத்தால் அடுத்த நிறுவனத்திற்கு சென்றேன். நல்ல பதிவு உயர்வு அதற்கு ஏற்ற சம்பளமும் கிடைத்தது. 1.5 ஆண்டுகள் கடந்தது, அப்போது எனது பழைய முதலாளியிடம் இருந்து அழைப்பு வந்தது. நமது நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு செல்லவுள்ள நிலையில் நான் அவருடன் இருந்தால் அருமையாக இருக்கும் ஆதலால் வந்து அந்த வேலைக்கான நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ள நானும் சென்று கலந்துகொண்டு வெற்றி பெற்றான்.”

அடுத்து என்ன?

“மீண்டும் பழைய முதலாளியிடம் வேலை, நல்ல சம்பளம் ஆனால் மீண்டும் அடுத்து என்ன என்ற தேடல் என்னை சுயமாக தொழில் துவங்க ஈர்த்தது. வேலை செய்து கொண்டே சில முன்னெடுப்புகளை எடுத்து வைத்தேன். ஆனால் முதல் படி சறுக்கல் தான். ஆனால் நான் தளர்வடையவில்லை. எனது நிறுவனத்தை சிங்கப்பூரில் பதிவு செய்தேன். திருச்சியிலும் அந்த நிறுவனத்தின் கிளையை துவங்கினேன். காலம் கடந்தது தந்தையின் இழப்பு என்னை குடும்பத்தோடு மீண்டும் தாயகம் திரும்ப வைத்தது”. “அடுத்து என்ற தேடல் தற்போது சேவை என்ற விஷயமாக பரிணாமவளர்ச்சி அடைந்துள்ளது”. என் தொழில் ரீதியாக என்னால் இயன்றதை யாருக்கு என்ன செய்தேன் என்பதை இலக்காக கொண்டு பயணித்து வருகின்றேன்”.

“அவ்வப்போது சில Negative Commentsகளும் வரும், அதை என்னை மெருகேற்றிக்கொள்ள எரிபொருளாக பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து நகர்கிறேன் சார்”

வாடிக்கையாளர்களின் திருப்தி மிக முக்கியம் என்பதில் தொடக்கம் முதலே அதிக அக்கறையும், முக்கியதுவமும் கொடுத்தோம்.

சிங்கப்பூர் கிராஞ்சியில் காண்போரை ஆச்சர்யப்படுத்தும் Cai Shen சிலை – இரண்டாவது மாடியில் ஏற்றியது எப்படி?

எங்களின் நேர்மைக்கு சாட்சி. இதுவே எங்களின் வளர்சிக்கும் காரணம்,” தேடல் சார் அது இருந்தா போதும்.. என்று கூறி முடித்தார் நந்தனா தயாளன் ராஜா…

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம்
திருச்சி 622 007

96000223091

air.nantha@gmail.com

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts