TamilSaaga

“மண்சரிவை நினைத்து கவலை வேண்டாம்” : புக்கிட் பாடோக் பூங்கா பாதுகாப்பாக உள்ளது – NParks விளக்கம்

சிங்கப்பூரில் உள்ள புக்கிட் பாடோக் இயற்கை பூங்காவை பார்வையிடும் பார்வையாளர்களுக்கு தற்போது பாதுகாப்பாக உள்ளது. அண்மையில் அங்கு ஏற்பட்ட மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி பொதுமக்களால் அணுக முடியாததாக உள்ளது என்று தேசிய பூங்கா வாரியம் (NParks) நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பூங்காவில் உள்ள ஒரு குன்றின் முகப்பில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவது குறித்து குடியிருப்பாளர்கள் பாதுகாப்புக் கவலைகளை எழுப்பியதால் இந்த அறிக்கையை NPark அதிகாரிகள் வெளியிட்டுள்ளார். இந்த மண்சரிவு இரண்டு மாதங்களாக நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, NParks-ன் பாதுகாப்புக்கான குழு இயக்குனர் லிம் லியாங் ஜிம், கடந்த இரண்டு மாதங்களில் “குன்றின் மேல் மணலை ஏற்றிய நிலையில், அண்மைக்காலமாக பெய்த கனமழையால் இந்த மண்சரிவு ஏற்பட்டிருக்கலாம்” என்றார். “மண் சரிவு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பூங்காவின் பகுதியை தற்போது பொதுமக்களால் அணுக முடியாததால், பூங்கா இன்னும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பாக உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

“குவாரியில் உள்ள கண்காணிப்பு பகுதிக்கான அணுகல் திறந்தே உள்ளது, ஏனெனில் குன்றின் கண்காணிப்பு பகுதியுடன் இணைக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார். 75 வயதான ஓய்வு பெற்ற பொறியியல் மேலாளர் கூறுகையில், “அந்த பகுதியில் முன்பிலிருந்தே சேறு குவிந்துள்ளது என்றார். 600மீ தொலைவில் உள்ள ஹில்வியூ அவென்யூவில் உள்ள ஒரு காண்டோமினியத்தில் வசிப்பவர் கூறுகையில், “நான் வசிக்கும் இடத்திலிருந்து இரவில் கூட என்னால் மன்சாரியும் ஒலி கேட்க முடியும் என்றார்.

“ஒரு பெரிய மண்சரிவு ஏற்பட்டால் அது கொஞ்சம் பயமாக இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார், குன்றின் மீது வளரும் சில பெரிய மரங்களும் கற்பாறைகளும் அகற்றப்பட்டுள்ளன. புக்கிட் பாடோக் டிரான்ஸ்மிட்டிங் ஸ்டேஷனின் டிரான்ஸ்மிட்டிங் கோபுரங்களில் ஒன்றிற்கு அருகில், இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்பு, ஒரு சிறிய மண்சரிவு ஏற்பட்டது என்று திரு டின் கூறினார். சேறும் சகதியுமாக இருப்பதால் கோபுரத்தை பாதித்து விடுமோ என்ற கவலை எனக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts