TamilSaaga

“கால்பந்து சூதாட்டம்” : இன்டர்போலுடன் இணைந்து செயல்பட்ட சிங்கப்பூர் போலீஸ் – சிங்கப்பூரில் 72 பேர் கைது

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற யூரோ 2020 போட்டியின் போது சட்டவிரோத கால்பந்து சூதாட்டத்தை இலக்காகக் கொண்ட இன்டர்போல் தலைமையிலான நடவடிக்கையில் ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த நடவடிக்கையில் பங்கேற்ற சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்ட செய்திக்குறிப்பில், கைது செய்யப்பட்டவர்கள் சுமார் 465 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை கையாண்ட சட்டவிரோத சூதாட்டச் கும்பல் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

SOGA VIII என்ற குற்றஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, SPF கடந்த ஜூன் 11 மற்றும் ஜூலை 31-க்கு இடையில் உள்ளூர் அமலாக்க நடவடிக்கைகளை தொடர்ச்சியாக நடத்தியது, இந்த நடவடிக்கை தான் 72 பேரை கைது செய்ய வழிவகுத்தது. மேலும் இந்த நடவடிக்கையின் போது 8,00,000 வெள்ளிக்கும் அதிகமான பணம் மற்றும் கணினிகள், மடிக்கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிங்கப்பூர் போலீஸ் துறை தெரிவித்துள்ளது. தற்போது 72 நபர்களுக்கும் எதிராக விசாரணை நடந்து வருகிறது.

சிங்கப்பூர் காவல் படையால் இன்டர்போலுடன் இணைந்து நடத்தப்பட்ட தொடர் நடவடிக்கைகள், சட்டவிரோத தொலைதூர சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகடந்த சிண்டிகேட்களை (குழுக்களை) முறியடிக்கும் காவல்துறையின் உறுதியை வலுப்படுத்துகின்றன,” என்று மூத்த உதவி ஆணையர் கவாங் ஹ்வீ, SPF குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குனர் கூறினார். SPF இன்டர்போல் மற்றும் வெளிநாட்டு சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து சட்டத்தை வெளிப்படையாக புறக்கணித்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறினார்.

சட்டவிரோதமான தொலைதூர சூதாட்டத்தில் பங்குபெற்ற குற்றவாளிக்கு ஆறு மாத சிறை 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். அதேபோல சட்டவிரோதமான தொலைதூர சூதாட்ட சேவைகளை வழங்கிய குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை, 20,000 வெள்ளி முதல் 2,00,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் இன்டர்போல் வெளியிட்ட தனி வெளியீட்டில் “நம்மில் பெரும்பாலோர் UEFA ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பை எளிய ரசிகர்களாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​28 நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான சிறப்பு அதிகாரிகள் சட்டவிரோத சூதாட்டம் மற்றும் தொடர்புடைய பணமோசடி நடவடிக்கைகளிலிருந்து மில்லியன் கணக்கான சம்பாதிக்க விரும்பும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை குறிவைத்தனர்” என்றார்.

ஆன்லைன் கேமிங் தளங்கள், மன்றங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அதிகரித்த செயல்பாட்டை அதிகாரிகள் கவனித்ததாக உலகளாவிய குற்றவியல் நிறுவனம் மேலும் கூறியது.

Related posts