சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்பது பல தமிழர்களின் கனவாகவே இருக்கும். சுற்றி பார்க்க வருபவர்களை விட வாழ்க்கையில் சாதிக்க காசு சேர்க்க வேர்வை சிந்தி சம்பாரிக்க தான் இங்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒவ்வொரு நாளும் வந்திறங்கி கொண்டு இருக்கின்றனர்.
சிங்கப்பூருக்கு தமிழகத்தில் இருந்து கிளம்பி வருபவர்களுக்கு வரும் ஜனவரி மாதத்தில் இமிகிரேஷனில் என்னென்ன டாக்குமெண்ட்கள் கேட்பார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தது என்றால் நிச்சயம் இது உங்களின் கேள்விகளுக்கு விடையாக இருக்கும்.
முதலில் வேலைக்காக மட்டுமல்லா படிக்க, சுற்றிப்பார்க்க என பலரும் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வருகிறார்கள். இதில், S-Pass, E-Pass, Tourist visa, dependent pass, business visa, student visa, TWP, TEP ஆகிய எல்லா வகையான பாஸ்களுக்கும் ஒரே மாதிரியான Documentsஐ தான் இமிகிரேஷன் அதிகாரிகள் கேட்பார்கள்.
முதலில் பாஸ்போர்ட்டை கையில் கவனமாக வைத்திருங்கள். அடுத்து உங்களுக்கு சிங்கப்பூர் வந்திருக்கும் நோக்கத்தை வைத்து கொடுக்கப்பட்டிருக்கும் விசாவை காட்டுங்கள். கொரோனாவிற்கான கோவிட் தடுப்பூசியை இரண்டும் போட்டிருக்க வேண்டும். அதிலும் உங்களிடன் கடைசி ஊசி போட்டு 1.5 வருடம் கடந்து விட்டிருந்தால் பூஸ்டரும் போட்டிருக்க வேண்டியது கட்டாயம்.
தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கையில் பிரிண்ட் அவுட்டாக இருக்க வேண்டும். இது இந்தியாவில் கொடுப்பது போல் அல்லாமல் சர்வதேச சான்றிதழாக இருக்க வேண்டும். உங்கள் பெயருக்கு பின்னால் உங்கள் தந்தையின் பெயர் இணைந்திருக்க வேண்டும். பிறந்த தேதி மற்றும் பாஸ்போர்ட் எண் கட்டாயமாக அந்த சான்றிதழில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
அடுத்து சிங்கப்பூர் பயணத்திற்கான டிக்கெட் மற்றும் SG arrival card. இதில் sg arrival card கட்டாயம் இல்லை என்றாலும் உடன் வைத்திருப்பது நல்லது. tourist visaவில் வந்திருப்பவர்கள் வரும்போது ரிட்டர்ன் டிக்கெட்டையும் போட்டு இருக்க வேண்டும். மேலும் நீங்கள் tourist visaவில் 28 நாட்கள் வரும் போது உங்களிடம் கேள்விகள் அதிகமாகவே கேட்கப்படு. மேலும், இந்த விசாவில் வருபவர்கள் கல்வி சான்றிதழ்களை எடுத்து வராதீர்கள்.
Work Permit, PCM permit, shipyard இந்த மூன்று விசா வைத்திருப்பவர்களுக்கும் ஒரு வகையான டாக்குமெண்ட்கள் எடுத்து வர வேண்டும். விசா, சர்வதேச கோவிட் தடுப்பூசி போட்ட சான்றிதழ், on boarding ஸ்லாட் புக்கிங் செய்த தகவல், டிக்கெட், பாண்ட் பேப்பர், SG arrival card. on boarding ஸ்லாட் என்பது நீங்கள் குவாரண்டைன் தங்குவதற்கான புக்கிங். இதில் ஒரு டாக்குமெண்ட்கள் இல்லாத பட்சத்தில் உங்களை அப்படியே திருப்பி அனுப்பி விடுவார்கள்.
குவாரண்டைன் இருப்பதால் உங்களுக்கு on boardingல் மூன்று நாட்கள் தங்க வைத்திருப்பார்கள். இது புதிதாக சிங்கப்பூர் வரும் ஊழியர்களுக்கு மட்டுமே. ஸ்லாட் போடப்படும் நாளை வைத்து டிக்கெட்டை புக் செய்து கொள்ளுங்கள். சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு லீவ்வில் சென்று திரும்பும் ஊழியர்களுக்கு இந்த தேவை இருக்காது. நீங்கள் நேரடியாகவே கம்பெனிக்கு சென்று விடலாம். இந்த டாக்குமெண்ட்டுகள் அனைத்தினையும் கண்டிப்பாக பிரிண்ட்டில் வைத்திருங்கள். செல்போனில் காட்டு விடலாம் என நினைக்க வேண்டாம்.