TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு வர ஆசையா? காசும் செலவு பண்ணக்கூடாது? ஆனால் பாதுகாப்பாகவும் இருக்கணுமா? ’இத’ பண்ணுங்க கியாரண்டியா வேலை கிடைக்கும்

சிங்கப்பூரில் வேலை செய்ய வேண்டும் என்பது பல இளைஞர்களுக்கு கனவாகவே இருந்து வருகிறது. அதை சிலர் தான் கஷ்டப்பட்டாவது செய்து முடிகின்றனர். சிலருக்கு எப்படி சிங்கப்பூர் போவது என்ற குழப்பத்திலேயே அந்த ஆசை நடக்காமலே இருந்து வருகிறது. இதில் ரொம்பவே பாதிக்கப்படுவது படிப்பை முடித்து அடுத்த என்ன செய்யலாம் என காத்திருக்கும் இளைஞர்கள் தான். எல்லா குழப்பத்துக்கும் விடை கொடுக்கும் வகையில் சிங்கப்பூர் வர விரும்பும் ப்ரஷர்களுக்கு செம வழியை இதில் சொல்லப்போறோம் கேளுங்க.

மாஸ்டர் டிகிரி வரை படித்து விட்டு சிங்கப்பூரில் வேலை தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு சிங்கப்பூர் என்ன மாதிரி பிரச்னைகள் இருக்கும் தெரியுமா? முதுகலை படிச்சிருந்தாலும் உங்களிடம் அனுபவம் இருக்கிறதா என்ற கேள்வியே முதலில் எழும். எப்படி இருந்தாலும் சிங்கப்பூருக்கு ஏஜென்ட்டிடன் பல லட்சங்களை கொடுக்க தானே வேண்டும். ஊரில் படிப்பதற்கு பதில் அந்த படிப்பை சிங்கப்பூரில் படிக்க முடிவு செய்யுங்கள். ஏகப்பட்ட துறைகளில் ஒன்றை தேர்வு செய்து முதலில் student visaல் சிங்கப்பூர் வாருங்கள். 6 முதல் 20 மாத படிப்பு முடிந்தவுடன் உங்க கல்லூரியே உங்களுக்கு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்கள். அதன் மூலம் S pass அல்லது E pass வாங்கிவிடலாம்.

மேலும் படிக்க: டெஸ்ட் அடிக்க லட்சக்கணக்கில் பணத்தை அழிச்சது போதும்.. சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வெறும் 80,000 ரூபாய் மட்டுமே.. நான்கே நாட்களில் Certificate!

படித்திருக்கேன் ஆனால் செலவு செய்து படிக்கலாம் முடியாது என நினைத்தால் உங்களுக்கும் ஒரு வழி இருக்கு. சிங்கப்பூர் வேலை தேட நிறைய ஆப்ஸ்கள் இணையத்தளத்தில் இருக்கிறது. அதில் இருக்கும் அதிகாரப்பூர்வ ஆப்ஸ்களான jobs street, job dbsல் உங்கள் தகுதிக்கான சரியான வேலையை தேடி பிடியுங்கள். உங்களுக்கு நேர்காணல் அழைப்பு வரும் அதில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களே எல்லா செலவினையும் செய்து சிங்கப்பூர் அழைத்து வந்து 2 அல்லது 3 மாதம் பயிற்சி கொடுத்து விடுவார்கள். இதில் பெரிய செலவுகள் இருக்காது. ஆனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். இது வெளிநாட்டினருக்கு கிடைப்பது கொஞ்சம் அரிது தான்.

பிரபலமாக இருப்பது தெரிந்த ஏஜென்ட் ஒருவரை பார்த்து பேசி அவர்கள் மூலம் வேலை தேடலாம். இவர்களும் உங்களும் ரொம்பவே தெரிந்த நபர்களாக இருக்க வேண்டியது அவசியம். தெரியாதவர்களிடம் சென்றால் பல லட்சங்களை ஏமாற்ற கூட வாய்ப்பு உண்டு. நல்ல ஏஜென்ட்டை தேர்வு செய்து அவர்களிடம் நீங்கள் படித்த தகுதிக்கோ, அனுபவத்திற்கோ வேலை கேட்டால் அவர்கள் சிங்கப்பூரில் இருக்கும் ஏஜென்ட்டை வைத்து உங்களுக்கு நல்ல வேலையை பார்த்து கொடுப்பார்கள். இதற்கும் லட்சங்களில் செலவுகள் இருக்கும்.

ஏமாற்று வேலையில் இருந்து தப்பித்து கண்டிப்பாக சிங்கப்பூரில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி Skilled test தான். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என யார் வேண்டும் என்றாலும் டெஸ்ட் அடிக்கலாம். உங்க சொந்த மாநிலங்களில் அதற்கான டெஸ்ட் அடிக்கும் மையங்கள் இருக்கும். அதில் சில ஆயிரங்களை கட்டி முதலில் சேர்ந்து கொள்ளலாம். டெஸ்ட் அடிக்க போகும் போது மற்ற தொகையை கட்டினாலே போதுமானது.

டெஸ்ட் அடிக்கவும் தயங்குபவரா நீங்க உங்களுக்கும் சிங்கப்பூரில் வாய்ப்பு இருக்கிறது. கப்பல் கட்டும் பணிகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலைக்கு எடுப்பார்கள். இதற்கு pcm permit பாஸ் கொடுக்கப்படும். இதுவும் ஏஜென்ட் மூலமாக தான் அதிக அளவில் பணம் கட்டி வர வேண்டும். தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிக்க வேண்டிய தேவை இருக்காது. சம்பளம் குறைவாக இருக்கும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts