TamilSaaga

சாங்கி ஏர்போர்ட்டில் இனி பாஸ்போர்ட் தேவையில்லை.. அறிமுகமாகிறது “Biometric verification” – அடுத்த லெவலுக்கு முன்னேறும் சிங்கப்பூர்

SINGAPORE: சாங்கி விமான நிலையத்தில் இந்த 2022ம் ஆண்டின் பிற்பகுதியில் பயணிகளின் verification-காக bio metrics முறை அமலுக்கு வரவுள்ளது.

இதனால் சாங்கி விமான நிலையத்தின் Immigration-ல் பயணிகள் இனி தங்கள் பாஸ்போர்ட் அல்லது போர்டிங் பாஸ்களைக் காட்ட வேண்டியதில்லை.

இதுகுறித்து மூத்த அமைச்சர் Teo Chee Hean செவ்வாயன்று (மே 17) கூறுகையில், “சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகள் physical identity மற்றும் பயண ஆவணங்களை சமர்ப்பிக்க தேவையில்லை. பயணிகள் அவர்களின் பயோமெட்ரிக்ஸை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான முயற்சிகளின் தற்போது நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

இது பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தொற்றுநோய்க்குப் பிந்தைய பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான விமான பயணத்துக்கு தேவையான புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பங்களிக்கும்” என்று கூறினார்.

மேலும் படிக்க – Exclusive: சிங்கப்பூர் to திருச்சி செல்ல “ஜஸ்ட்” ரூ.40 ஆயிரம் – ஒரு குடும்பமே சென்றால் 2 லட்சம் “காலி” – எகிறிய Ticket Demand

இதுகுறித்து குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) கூறுகையில், “எதிர்காலத்தில் சிங்கப்பூர் வாசிகள் சாங்கி விமான நிலையத்திலிருந்தோ அல்லது வெளியூரில் இருந்து சாங்கி வரும்போதோ அவர்கள் தங்கள் Passport-ஐ சமர்ப்பிக்காமலேயே immigration-ஐ clear செய்ய முடியும்.

அதற்கு பதிலாக, அவர்கள் அனுமதி வாயில்கள் வழியாக செல்லும்போது கருவிழி மற்றும் முக பயோமெட்ரிக்ஸ் மூலம் அவர்களின் அடையாளங்கள் சரிபார்க்கப்படும்” என்று தெரிவித்தது.

இந்த மாத தொடக்கத்தில் ஐசிஏ இதுகுறித்து கூறுகையில், “சிங்கப்பூருக்கு முதல்முறையாக வரும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் முக மற்றும் கருவிழிப் பயோமெட்ரிக்ஸைப் பதிவுசெய்த பின், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் அடுத்த முறை சிங்கப்பூர் வரும் போது, பாஸ்போர்ட் verification இல்லாமல் தங்கள் Immigration-ஐ clear செய்ய முடியும்” என்று குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts