TamilSaaga

சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் M-Sep திட்டம்… அதிகரிக்கும் வொர்க் பெர்மிட் மற்றும் s-pass கோட்டா… மகிழ்ச்சியில் ஊழியர்கள்

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI), மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் பங்குபெறும் பொருளாதார நிறுவனங்களுடன் இணைந்து, Manpower for Strategic Economic Priorities (M-SEP) திட்டத்தை டிச.13 செவ்வாய் அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெற வேண்டும் என்றால், நிறுவனங்கள் சிங்கப்பூரின் முக்கிய பொருளாதார முன்னெடுப்புகளில் பங்குபெற வேண்டியது அவசியமாகிறது.

மனிதவள அமைச்சரும், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான இரண்டாவது அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங், 4 மார்ச் 2022 அன்று M-SEP திட்டத்தை MOM கமிட்டி ஆஃப் சப்ளை 2022 உரையில் முதன்முதலில் அறிவித்தார். இந்த திட்டத்தினை அங்கீகரிப்பதன் மூலம் சிங்கப்பூரின் பாஸ் நடவடிக்கைகளில் MOM மாற்றங்களை செய்ய இருக்கிறது. இதன் மூலம் சிங்கப்பூரின் பொருளாதார முன்னேற்றங்களுக்கான முதலீடு, கண்டுபிடிப்பு அல்லது சர்வதேசமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு பங்களிக்கும் வணிக நிறுவனங்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.

சிங்கப்பூரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக வெளிநாட்டு ஊழியர்களினை அதிகரிக்கும் நிறுவனங்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள M-SEP, சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும். அதே வேளையில், சிங்கப்பூரும் வெற்றிகரமாக வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கு M-SEP உதவும்.

இதையும் படிங்க: சிங்கை மனிதவளத்துறை உங்க பாஸுக்கு என்ன சம்பளம் நிர்ணயித்து இருக்கிறது? உங்க கம்பெனி அந்த சம்பளத்தை தான் கொடுக்கிறதா? செக் பண்ணிக்கோங்க

இந்தத் திட்டத்தில் தகுதிபெறும் நிறுவனங்கள், நடைமுறையில் அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கோட்டாவைவிட அதிகமான skilled test வொர்க் பெர்மிட் மற்றும் s-pass வைத்திருப்பவர்களை பணிக்கு எடுக்க அனுமதி கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் தகுதி பெற, நிறுவனங்கள் சிங்கப்பூர் மக்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். தகுதியுள்ள நிறுவனங்கள், ஒரு நிறுவனத்திற்கு 50 தொழிலாளர்களின் வரம்புக்கு உட்பட்டு, அவர்களின் அடிப்படை பணியாளர் எண்ணிக்கையை விட 5% வரை கூடுதல் s-pass மற்றும் வொர்க் பெர்மிட்டை ஒதுகீட்டைப் பெறலாம். M-SEP திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இத்தகைய கூடுதல் தளர்வுகள், பதிவு செய்தவுடன் 2 ஆண்டுகள் நீடிக்கும். அதன்பிறகு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மேலும் புதுப்பிக்கப்படலாம்.

இத்திட்டத்திற்கு தகுதி பெற, நிறுவனங்கள் பின்வரும் இரண்டு நிபந்தனைகளையும் கடைப்பிடித்திருக்க வேண்டும்:

  • நிபந்தனை 1 – பின்வரும் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்றில் பங்கேற்று இருக்க வேண்டும்.
    *சிங்கப்பூரின் hub strategy ஆதரிக்கும் முதலீடுகள்
    *கண்டுபிடிப்பு அல்லது ஆராய்ச்சி & மேம்பாடு (R&D)
    *சர்வதேசமயமாக்கல்

இந்த நிபந்தனைகளை சிங்கப்பூரில் இருக்கும் 1000 நிறுவனங்களில் ஒரு சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்கிறது. அந்த நிறுவனங்கள் அனைத்திற்குமே கூடுதலான s-pass மற்றும் வொர்க் பெர்மிட் வைத்திருக்கும் ஊழியர்கள் தேவைப்படுகிறது. அப்போது சிங்கப்பூர் ஊழியர்களை வேலைக்கு எடுத்து கொள்வதாக MOM தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  • நிபந்தனை 2 – சிங்கப்பூர் ஊழியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். ஃப்ரஷர்களை பணிக்கு எடுத்து பயிற்சி கொடுக்க வேண்டும்.

M-SEP புதுப்பித்தலுக்குத் தகுதிபெற, நிறுவனங்கள் M-SEP ஆதரவுக் காலத்தின் முடிவில் இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துவிட்டதாகக் காட்ட வேண்டும். இந்த காலகட்டத்தில் நிறுவனங்கள் தங்கள் உள்ளூர் பணியாளர்களின் பங்கையும் உறுதி செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுபவர்கள் M-SEPலிருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவார்கள்.

M-SEP திட்டம், இணைந்திருப்பதற்கான சிங்கப்பூரின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. மேலும் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கவும், சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பிசினஸ் செய்யும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

M-SEP திட்டத்திற்கு MOM இன் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை முதல் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் logistics, hospitality துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts