பல தலைமுறைகளுக்கு முன்னால் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த தமிழர்களால் கட்டப்பட்ட கோயில் தண்டாயுதபாணி முருகன் கோயில் ஆகும். தமிழ்நாட்டில் முருகனுக்கான தைப்பூசம் எவ்வாறு கொண்டாடப்படுகின்றதோ அதேபோன்று விமர்சையாக சிங்கப்பூரிலும் கொண்டாடப்படும். இந்த வருடம் தைப்பூச திருவிழாவானது ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பூச திருவிழாவுக்காக நேர்த்திக்கடனை செலுத்த விரும்பும் பக்தர்கள் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலுக்கு 24 ஆம் தேதி இரவு 11:30 மணிக்குள் வர வேண்டும் என ஏற்கனவே கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் மேளதாளத்துடன் சென்று முருகனுக்கு அதை சமர்ப்பிப்பது வழக்கம். இந்நிலையில் காவடி எடுப்பவர்கள் சொந்தமாக மேளம் அடிக்கும் நபரை அழைத்து வரக்கூடாது என்றும், ஏற்கனவே புக் செய்து நிறுத்தப்பட்டிருக்கும் நபரை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஹாஸ்டிங்ஸ் ரோடு, ஷார்ட் ஸ்ட்ரீட், selegie center அப்புறம்,cathay green மற்றும் கிளமெண்ட் நியூ அவென்யூ ஆகிய இடங்களில் மேளம் கொட்டும் நபர்கள் நிறுத்தப்பட்டு இருப்பார்கள். இரவு 7:00 மணி முதல் 10:30 மணி வரை மேளதாளங்கள் வாசிக்கப்படும். இதற்காக புக் செய்ய விரும்பும் நபர்கள் மற்றும் பஜனை பாடுபவர்கள் ஆகியோர் நம்பர் 27ஆம் தேதிக்குள் ஆன்லைனில் புக் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேளதாளம் வாசிக்கும் நபர்கள் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் அதன் வழியே அளிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். தண்டாயுதபாணி கோவிலில் மேல் அடிக்க அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மிகப்பெரிய அளவில் ஆன ஸ்பீக்கர்கள் அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.