TamilSaaga

கஷ்டப்பட்டு காசு சேர்த்து போராடி சிங்கப்பூர் வந்தால் மெடிக்கலில் unfit… இந்திய அனுப்பும் கம்பெனி நிர்வாகம்… யாரால் மீண்டும் சிங்கை திரும்ப முடியும்?

வீட்டின் பொருளாதாரத்தின் மீட்டெடுக்க தெரிந்தவர்களிடம் கடனை வாங்கி கொண்டு சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கும் எக்கச்சக்க இளைஞர்களுக்கு தான் தெரியும் அவர்கள் பட்ட கஷ்டம்.

சொந்த நாட்டில் ஒரு ஏஜென்ட்டினை பிடித்து அவர் நல்லவரா இருக்க வேண்டும். ஏமாந்தால் மொத்தமாக முடிந்து விடும். ஏமாறாமல் ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு விசா ஆப்ளே செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் SPass வேலைக்கு போறீங்களா? இந்த டாப் 10 துறைகளில் தான் அதிக வேலைவாய்ப்புகள் இருக்காம்… பிடிங்க லிஸ்ட்… கியாரண்டியா வாழ்க்கை இருக்கு!

அவர்களை தாண்டி கட்டணத்திற்கு எக்கச்சக்க லட்சங்களை கொடுத்து ஒரு வேலையை வாங்கி வருவதிற்குள் போராட்டமே நிகழ்ந்து இருக்கும். சிங்கப்பூர் வந்து சில காலம் இந்த போராட்டம் நிகழும்.

கட்டாய safety course எழுதி பாஸ் செய்ய வேண்டும். அதை கூட விழுந்து பிரண்டு எழுதி விடலாம். ஆனால் மெடிக்கல் டெஸ்ட் என்பது அவர்கள் கையிலா இருக்கிறது. உடலில் தெரியாமல் இருக்கும் நோய் எதுவும் தெரிந்து unfit சான்றிதழ் கொடுத்து விட்டால் நாடு திரும்ப வேண்டியது தான்.

வேலைக்காக சிங்கப்பூர் வரும் ஊழியர் மெடிகலில் unfit ஆகி விட்டால் என்ன நடக்கும்? சிங்கப்பூரை விட்டு வெளியேற்றி விட்டால் மீண்டும் வர முடியுமா?இந்த கேள்வி முடியும், முடியாது என இரண்டுமே விடையாக இருக்கும். ஏனெனில் நீங்கள் எதனால் மெடிக்கலில் unfit ஆகிவிட்டீர்கள் என்பதை பொறுத்தே மாறுபடும்.

உங்களுக்கு இருக்கும் பிரச்சனை சில நாட்களில் குணப்படுத்த கூடியது என்றால் சிங்கப்பூரில் இருந்தே மருத்துவம் பார்த்து மீண்டும் டெஸ்ட் எடுத்து fit என சான்றிதழ் வாங்கிவிடலாம். ஆனால் இப்போது இருக்கும் சில முதலாளிகள் அவர்களுக்கு மருத்துவம் பார்க்காமல் நாட்டுக்கு அனுப்பி விடுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் செல்ல skill டெஸ்ட் அடிக்கப்போகும் பட்டதாரியா நீங்க… ஒரு நிமிஷம்… நீங்க பறிக்கிறது இன்னொருத்தரோட வாழ்க்கையனு சொன்ன மறுக்க முடியுமா?

அப்படி செய்தால் உங்கள் மருத்துவ பிரச்னை சாதாரணமாக இருந்தால் அதை சரி செய்து கொண்டால் உங்களால் மீண்டும் சிங்கப்பூர் வர முடியும்.ஆனால் பரவக்கூடிய நோய்களான காசநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட குறைபாடுகள் கொண்டவர்களால் சிங்கப்பூர் மீண்டும் வரவே முடியாது. அடுத்து உங்கள் வேலைக்கான திறன்களில் பிரச்னை கண் குறைபாடு, காது பிரச்னை ஏற்பட்டால் உங்களால் குறிப்பிட்ட அந்த துறைக்கு வேலைக்கு வர முடியாது.

ஆனால் அது முக்கியமாக தேவைப்படாத பிற துறைக்கு வேலைக்கு வரலாம். மேலும், இப்படி ஊழியர்களை நிறுவனம் அனுப்பும் பொதுஅவர் கட்டிய 60 சதவீத பணத்தினை ஏஜென்ட் கொடுக்க வேண்டும் என்பதும் சிங்கப்பூரில் இருக்கும் விதிகளில் ஒன்று.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts