சிங்கப்பூரில் இந்தாண்டு இளையோர் கொண்டாட்ட விழாவானது இணையத்தில் நடைபெற இருக்கிறது. இதில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு கலை சார்ந்த விடயங்கள் நடைபெற உள்ளது.
ஓவியம் வரைதல், இசை இசைத்தல், நடனம் ஆடுதல் மற்றும் நாடகம் போன்ற கலைகளை மாணவர்கள் உலகறியச் செய்யலாம்.
மே.26 முதல் இதில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் நாள் வரை தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகள் SYF இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்த விழாவானது “Celebrate The Arts In Schools” என்ற கருத்தினை மையமாக கொண்டு நடைபெறுகிறது. இதில் ஒவியக் கண்காட்சி ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை மிகுந்த சவாலான கால கட்டத்திலும் இளைய சமுதாயத்தின் திறன்களை மீட்டு வெளிக்கொணரும் வகையில் இந்த இணையவழி இளையோர் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.