TamilSaaga

வெளிநாட்டில் இருந்து இந்திய பயணம்… Connecting Flights வேண்டவே வேண்டாம் – திருச்சி ஏர்போர்ட் தந்த முக்கிய “அலர்ட்”

பொதுவாக வெளிநாடுகளில் இந்தியா இருந்து வரும் போது, பலரும் டிக்கெட் டிமாண்ட், கட்டணம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக Connecting Flights பயன்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில், Trichy Aviation சார்பாக வெளியிடப்பட்டுள்ள ட்வீட் ஒன்று பயணிகளை கவனத்தைப் பெற்றுள்ளது.

அதில், “பயணிகள் நேரடி விமான சேவையை பயன்படுத்தவும். உலகம் முழுவதும் ஏர்போர்ட் & ஏர்லைன்ஸ்களில் ஆட்கள் பற்றாக்குறையால், இணைப்பு விமானசேவைகளில் பல பயணிகளுக்கு லக்கேஜ் வருவதில் ஓரிரு நாட்கள் தாமதமாகிறது. வீண் அலைச்சல், செலவு ஏற்படுகிறது. நேரடி விமானசேவைகளை பயன்படுத்தி இவற்றை தவிர்க்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூர் சகுந்தலா ரெஸ்டாரண்டில்.. அரிசிக்கு பதில் பொங்கிய அன்பு… தமிழக ஊழியர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய மாணவன்!

பெருந்தொற்று காலத்தில் பலர் வேலையிழந்து நிலையில், பல துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில், Aviation துறையும் ஒன்று. உலகம் முழுவதும் விமான துறையில் பல ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்தனர். இந்த 2022 பிப்ரவரிக்கு பிறகு தான், ஓரளவு அனைத்து துறைகளும் மீண்டு வருகிறது.

நமது சிங்கப்பூரில், சாங்கி விமான நிலையமும், கடந்த மார்ச் மாதம் மூலம், முழு வீச்சில் இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிக அளவிலான பயணிகளை சாங்கி ஏர்போர்ட் கையாண்டு வருகிறது.

திருச்சி விமான நிலையமும் தற்போது முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவது இந்த ட்வீட் மூலம் தெரிய வருகிறது. நான்காவது அலை, ஐந்தாவது அலை என்று பெருந்தொற்று நீட்சியடையாமல் இருந்தால், இன்னும் ஒரு வருடத்தில், கோரோனோவுக்கு முந்தைய ‘பரபர’ காலத்தை அடைந்துவிட முடியும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts