சிங்கப்பூரின் கிழக்கு கெய்லாங் என்னும் இடத்தில் காணப்படுகிறது ஸ்ரீ சிவ பெருமான் கோயில்.
1850 ஆம் ஆண்டிலிருந்தே சிவலிங்க வழிபாடுகள் நடைபெற்று வந்துகொண்டு இருந்தன. 1983ஆம் ஆண்டில் இந்த கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு வரை மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது.
இரண்டாம் உலகப்போரின் போது இந்த கோயிலானது சேதப்படுத்தப்பட்டு பிறகு மீண்டும் இந்த கோயில் சீரமைத்து கட்டப்பட்டது.
1962 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து கட்டிடக்கலை நிபுணர்கள், சிலை சிற்பி நிபுணர்கள் வழவழைக்கப்பட்டு இந்த கோயில் கட்டப்பட்டது.
மகாசிவராத்திரி, நவராத்திரி, குருபெயர்ச்சி, பிரதோஷம் ஆகியன இந்த கோயிலில் சிறப்பாக நடத்தப்படும் விழாக்களின் முக்கிய தினங்களாகும்.
இந்த கோயிலானது நம்பர் 24, கெயிலாங் சாலை, கிழக்கு அவென்யூ – 2, சிங்கப்பூரில் அமைந்து உள்ளது.