சிங்கப்பூரில் பணி புரியும் லட்சக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களுக்கென்று பிரத்தியேகமாக சேவை ஆற்றுகின்ற 13 மருத்துவ மையங்கள் தற்பொழுது சிங்கப்பூரில் உள்ளது. பொது மருத்துவர்கள் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதைப் போல இருந்த மருத்துவ மையங்களிலும் தீவிர மற்றும் நாட்பட்ட நோய்களுக்கு எளிய பராமரிப்பு வழங்கப்படுகிறது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருக்கும் இடங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு இந்த மருத்துவ மையங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த 13 மருத்துவ மையங்களில் 5 மையங்கள் வெளிநாட்டு ஊழியர்களின் பெரிய தங்கும் இடங்களுக்கும் அருகிலும். மீதமுள்ள 8 மையங்கள் வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்கள், தங்குமிடங்கள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளிலும் அமைந்துள்ளன.
இனி இந்த மருத்துவ மையங்களுக்கு பதிலாக வட்டார அளவில் தங்கும் விடுதிகளில் மூன்று மையங்களும் அமைக்கப்பட வருகின்றன.