TamilSaaga

FB, Twitter, TikTok… குடுமியை ஒட்ட நறுக்கும் சிங்கப்பூர் – ‘Content’ பைத்தியங்களை தெளிய வச்சு வச்சு அடிக்க புதிய சட்டம்!

சிங்கப்பூரில் இருக்கும் Facebook, TikTok மற்றும் Twitter பயனர்கள் தரம் குறைந்த பதிவுகளை வெளியிடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரின் புதிய இணைய விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், இம்மூன்று சமூக தளங்களும் அதனை சிங்கையில் அமல்படுத்த உள்ளன.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்கள் ஒவ்வொருவரின் மொபைலையும் ஆக்கிரமித்திருக்கும் இந்த காலத்தில், அதிலிருந்து வெளிப்படும் விஷமங்கள் கட்டுக்கடங்காமல் உள்ளன.

முகத்தை மறைத்துக் கொண்டு அருவருப்பாக பேசுவது, தவறான தகவல்களை பரப்புவது, முகம் தெரியாத பெண்களின் முகைப்படங்களை தவறாக பயன்படுத்துவது. தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்து பிடிக்காதவர்களை திட்டுவது என்று அருவருப்பின் உச்சமாக இவை மாறிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக டிக்டாக்.. இது ஆபாசத்தை உச்சிக்கே சென்றுவிட்டது. இதனால் இந்தியாவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், நமது சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் டிக்டாக் பயன்படுத்த முடியும். அதேசமயம், சிங்கப்பூரிலும் சமூக தளங்கள் பலரால் வரம்பு மீறி பயன்படுத்தப்படுவது அரசின் கவனத்துக்கு வந்தது. இதைக்கட்டுப்படுத்தும் நோக்கில், இணையதளம் பயன்படுத்துவதில் புது சட்ட விதிமுறைகளை சிங்கை அரசு கொண்டுவந்துள்ளது.

‘Practice for Online Safety and the Content Code for Social Media Services’ ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய விதிகளின் படி, விதிமுறைகளை மீறும் தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்படும்.

சிங்கப்பூரின் சமூக தளங்கள் பயன்படுத்துவோருக்கு தீங்கு விளைவிக்கும்படியான பதிவுகள் எந்த தளத்தில் வெளியானாலும், அதனை முடக்குவதற்கு Infocomm Media Development Authority-க்கு (IMDA) அதிகாரம் அளிக்கப்படும்.

மேலும் IMDA இணையதளத்தில் வெளியிடப்படும் வருடாந்திர பொறுப்புக்கூறல் அறிக்கைகளைத் தயாரிக்க தளங்கள் தேவைப்படும்.

இந்நிலையில், தகவல் தொடர்பு அமைச்சர் ஜோசபின் தியோ இன்று (ஜூன் 20) பேஸ்புக் பதிவில் உத்தேச புதிய விதிகளின் சில விவரங்களை அறிவித்தார்.

“ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான உலகளாவிய இயக்கம் வளர்ந்து வருகிறது, மக்கள் சமூக ஊடகங்களில் ஈடுபடும்போது நன்மையுடன் தீமைகளும் சேர்ந்தே வருகின்றன. ஆன்லைன் தீங்குகளுக்கு எதிராக பயனர்களைப் பாதுகாக்க பல நாடுகள் சட்டங்களை இயற்றியுள்ளன அல்லது இயற்றும் செயல்பாட்டில் உள்ளன. அந்த வகையில் சிங்கப்பூரும் தற்போது இணைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பான பதிவுகள், சிறுவர் ஆபாசப் படங்கள், மோசடிகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் போன்ற சட்டவிரோத பதிவுகளை கையாள இந்த புதிய சட்டங்கள் சிங்கப்பூரின் கரங்களை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Related posts