SINGAPORE: 2 ஆண்டு வறட்சிக்கு பிறகு, இன்று (ஆக.19) பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியுள்ளது SINGAPORE NIGHT FESTIVAL எனும் சிங்கப்பூர் இரவு திருவிழா.
சிங்கப்பூரின் பழம்பெரும் மாவட்டமான Bras Basah-ல் நடைபெறும் SINGAPORE NIGHT FESTIVAL எனும் திருவிழா, கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், இன்று முதல் கோலாகலமாக இத்திருவிழா தொடங்கியுள்ளது. சுமார் 2 வாரம் கொண்டாட்டங்கள் நிறைந்த விழாவாக இது அரங்கேற உள்ளது.
மொத்தம் 55க்கும் மேற்பட்ட Live நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அதில், டாப் 5 நிகழ்ச்சிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
- Heat Of The Night
National Library Board and Indie Tours ஏற்பாடு செய்த போட்டி இது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் தடயங்களை தேடி எடுத்து, உங்களுக்கு கொடுக்கப்பட்ட புதிருக்கான விடையை கண்டறிய வேண்டும். அட.. சின்ன வயசுல நம்ம ஸ்கூல்ல விளையாடின அதே விளையாட்டு தாங்க! புதிருக்கு சரியான விடையை கண்டறிபவர்களுக்கு, மாலையில் சூப்பரான மெகா பரிசு ஒன்றும் அளிக்கப்படும்.
Where: சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம், 93 ஸ்டாம்போர்ட் சாலை
When: ஆகஸ்ட் 19, 20, 26 மற்றும் 27, இரவு 7.30 முதல் நள்ளிரவு வரை
Admission: ஒரு நபருக்கு $10 மற்றும் ஆறு பேருக்கு $50
- Discoloo Centre
இது ஒருவகையான டிஸ்கோ நடன விளையாட்டு தான். ஆனால், பெண்டு கழண்டுவிடும். அதனால் நன்கு ஆடத் தெரிந்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
Where: வாட்டர்லூ மையம், 261 வாட்டர்லூ தெரு
When: ஆகஸ்ட் 19, 20, 26 மற்றும் 27, (8 மற்றும் இரவு 9.30 மணிக்கு)
Admission: இலவசம். பதிவு செய்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன் வந்து சேர வேண்டும்.
- BBBooze O’Clock powered by Sui Gin

Where: Bras Basah-Bugis வளாகம்
When: ஆகஸ்ட் 19 முதல் 27 வரை, இரவு 7.30 முதல் நள்ளிரவு வரை
Admission: ஒரு நபருக்கு $90 (includes five drink coupons)
- SG Night Fest Food Tour
இது தான் நம்ம அயிட்டம்.

When: ஆகஸ்ட் 19 மற்றும் 26, மாலை 6 முதல் 8.30 வரை உணவருந்துதல்; ஆகஸ்ட் 20 மற்றும் 26, மாலை 6 முதல் 8 மணி வரை சுற்றுலா
Admission: உணவருந்துவதற்கு ஒரு நபருக்கு $50, சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு $35
- Explore SG Night Fest With Trishaw Uncle
சிங்கப்பூரின் முதிய குடிமகன்கள் மூலம், பல இடங்களை சுற்றிப்பார்த்து அதன் அருமை பெருமைகளை, வரலாறுகளை அவர்களே சொல்லக் கேட்க முடியும். இரண்டு நபர்கள் வண்டியில் செல்ல $40 ஆகும்.
Where: Bras Basah-Bugis வளாகம்
When: ஆகஸ்ட் 19, 20, 26 மற்றும் 27, 8 முதல் இரவு 10 மணி வரை, 30 நிமிட இடைவெளியில் சுற்றுப்பயணங்கள்
Admission: இரண்டு நபர்களுக்கு $40