கொரோனா பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மீறியதாகக் கூறி பிரபல சகுந்தலா உலகம் உட்பட 8 உணவகங்களை மூட சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி உறுதி செய்யத் தவறியதால் அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும் சகுந்தலா உணவகம், வாடிக்கையாளர்களிடம் Trace Together கருவியை பயன்படுத்துவதை உறுதி செய்யத் தவறியதும். உடல் வெப்பநிலையை பரிசோதிக்க தவறியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உணவகம் இம்மாதம் 2ம் தேதியில் இருந்து 11 ஆம் தேதி வரை மூட வேண்டும் என சிங்கப்பூர் பயணத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் 13 இடங்களுக்கும் 23 தனிநபர்களுக்கும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இடத்திற்கும் ஆயிரம் வெள்ளி அபராதமும், தனிநபர்களுக்கு 300 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் மற்றும் கடற்கரையில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மீறியதாக 33 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.