Singapore MRT Station: சிங்கப்பூரின் Downtown ரயில் பாதையில் புக்கிட் பாஞ்சாங் அருகே உள்ள ஹியூம் ரயில் நிலையம் இந்த மாதக் கடைசியில் திறக்கப்பட உள்ளது. இது அப்பர் புக்கிட் தீமா சாலையில் அமைந்துள்ளது. இந்த புதிய ரயில் நிலையம் புக்கிட் பாஞ்சாங் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களுக்குப் பயண வசதியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டௌன்டவுன் ரயில் பாதையில் அமைந்துள்ள புதிய ஹியூம் எம்ஆர்டி நிலையம், அதன் தனித்துவமான மஞ்சள்நிற கிரானைட் முகப்பின் மூலம் கட்டடக் கலைச் சிறப்பை வெளிப்படுத்துகிறது. இந்த நவீன அமைப்பு, பயணிகளுக்கு அழகான அனுபவத்தையும் சிறந்த வசதியையும் வழங்குகிறது. அத்துடன், முன்னாள் ஃபோர்ட் தொழிற்சாலையைக் குறிக்கும் வகையில் வெள்ளைநிறம் சேர்க்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.
அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அமைந்திருக்கும் ஹியூம் நிலையம் குறித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாகக் காத்திருந்த பயணிகளுக்கு இந்த புதிய ரயில் நிலையம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
ஹியூம் நிலையத்தின் கட்டுமானம் 2021ஆம் ஆண்டு தொடங்கியது. கட்டுமானத்தின் போது, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் மற்ற நிலையங்களில் பயணிகள் சேவை தடைப்படாமல் இருப்பதை உறுதிசெய்வது சவாலாக இருந்தது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், கட்டுமானப் பணிகள் அருகில் உள்ள வீடுகளை எந்தவிதத்திலும் பாதிக்காமல் பார்த்துக்கொண்டதாகவும் ஆணையம் கூறியது.
ஹில்வியூ (Hillview), பியூட்டி வோர்ல்ட் (Beauty World) நிலையங்களுக்கு நடுவே இந்த ஹியூம் நிலையம் அமைந்துள்ளது. இந்த புதிய நிலையம் அப்பர் புக்கிட் தீமா சாலையில் அமைந்துள்ளது.
இந்த நிலையத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், அந்த வட்டாரத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும் இரண்டு கலைப் படைப்புகளை அங்கு காணலாம். இந்த கலைப் படைப்புகள் அந்தப் பகுதியின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அருகில் உள்ள புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதியைப் பிரதிபலிக்கும் வண்ணம் அதன் முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் உட்புற அலங்காரம் பச்சை, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களுடன் அமைந்துள்ளது.
சிங்கப்பூர்-இந்தியா: புதிய விமானப் பயணம்… விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி!!
டௌன்டவுன் ரயில் பாதையில் தற்போது மொத்தம் 35 ரயில் நிலையங்கள் செயல்படுகின்றன, இதில் சமீபத்தில் இணைந்த ஹியூம் எம்ஆர்டி நிலையம் குறிப்பிடத்தக்கது. டௌன்டவுன் பாதையில் ஹில்வியூ மற்றும் பியூட்டி வோர்ல்டு நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஹியூம் எம்ஆர்டி நிலையம், இம்மாதம் 28ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுகிறது.
ஹில்வியூ மற்றும் பியூட்டி வோர்ல்ட் நிலையங்களுக்கு இடையில் வசிக்கும் 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு இந்த நிலையம் சேவையாற்றும்.
இந்த நிலையத்திற்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. ஒன்று அப்பர் புக்கிட் தீமா ரோட்டை நோக்கியும் மற்றொன்று ஹியூம் அவென்யூவை நோக்கியும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய ரயில் நிலையம் அப்பகுதி மக்களின் பயணத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த ரயில் நிலையம் புக்கிட் பாஞ்சாங் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களுக்குப் பயண வசதியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.