TamilSaaga

சுவையான செய்தி… சிங்கப்பூரில் மனிதர்கள் பூச்சிகளை சாப்பிட விரைவில் அனுமதி!

சிங்கப்பூரர்கள் விரைவில் முழுப் பூச்சிகள் மற்றும் பூச்சி உணவுப் பொருட்களை உள்நாட்டிலேயே உட்கொள்ளும் அனுமதி கிடைக்கவுள்ளது.

சிங்கப்பூர் உணவு ஏஜென்சி (SFA) சமீபத்தில் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களுக்கான ஒழுங்குமுறை நிலையை மதிப்பாய்வு செய்து முடித்துள்ளது.

இதையடுத்து, SFA தற்போது மனிதர்கள் மற்றும் கால்நடைகள் உண்பதற்கு ஏற்ற பூச்சிகள் மற்றும் பூச்சி உணவுப்பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய பரிசீலித்து வருகிறது.

இவை சில நிபந்தனைகள் மற்றும் கண்டிஷன்களுக்கு உட்பட்டு இருக்கும்.

மேலும் படிக்க – சிங்கப்பூரின் பெருமையை உலகறிய மெச்ச வைக்கும் CapitaSpring கட்டிடம்… உலகை திரும்பிப் பார்க்க வைக்கும் “பிரம்மாண்டம்”!

இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிகள் மற்றும் உள்நாட்டில் வளர்க்கப்படும் பதப்படுத்தப்பட்ட பூச்சிகள் ஆகிய இரண்டையும் உண்ணுவதற்கு ஏற்ப வழிவகை செய்யப்படுகிறது.

மனிதர்கள் உண்ணக்கூடிய இந்த பூச்சிகள் அடங்கிய பட்டியலில், 16 பூச்சி இனங்கள் இடம்பெற்றுள்ளன. கிரிக்கெட் பூச்சி, வெட்டுக்கிளி, புழு, பட்டுப்புழு, ஐரோப்பிய தேனீ மற்றும் ராட்சத காண்டாமிருக வண்டு ஆகியவை இதில் அடங்கும்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளில் இந்த பூச்சி வகைகளுக்கு ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில், சிங்கப்பூரிலும் பூச்சிகளை உண்ண அனுமதி கொடுத்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts