TamilSaaga

‘தனிமைப்படுத்தியும் சும்மா இல்ல’ – பால்கனியில் எகிறிக்குதித்த பெண்ணுக்கு அபராதம்?

சிங்கப்பூரில் 39 வயதான சிங்கப்பூரர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 30) பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீறியதற்காக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அந்த பெண்மணி செண்டோசா ஹோட்டலில் தனிமைப்படுத்துதலில் இருந்த காலத்தில் முகக்கவசம் இல்லாமல் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முகாமில் இருந்து வெளியேறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் பிறருக்கு பெருந்தொற்று ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தியதற்காக, கோவிட் -19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு உத்தரவு) விதிமுறைகள் 2020 இன் கீழ் அவர் வசிக்கும் இடத்திற்கு வெளியே முகமூடி அணியத் தவறியதற்காகவும் ஜின் சென்சு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இன்று ஜூலை 30 அன்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையத்தின் (ஐசிஏ) செய்தி அறிக்கையின்படி, ஜின் சென்சு கம்போடியாவில் இருந்து அக்டோபர் 4, 2020 அன்று சிங்கப்பூர் வந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 4ம் தேதி முதல் 18ம் தேதி வரை அவர் தனிமைப்படுத்துதலில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 6, 2020 அன்று, ஜின் முகமூடி அணியாமல் தனது அறையை விட்டு வெளியேறி மற்றொரு அறையின் பால்கனியில் எறியுள்ளார். மீண்டும் மூன்று நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 9 அன்று, ஜின் மீண்டும் முகமூடி அணியாமல் தனது அறையை விட்டு வெளியேறினார், ஹோட்டல் ஊழியர்கள் 25 நிமிடங்களுக்குப் பிறகு அவரைக் கண்டுபிடித்து மீண்டும் அவரது அறைக்கு அழைத்துச் செல்லும் வரை பொது நடைபாதையில் சுற்றித் திரிந்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு 10,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

Related posts