பல உலக நாடுகளுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றது சிங்கப்பூர் என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசின் புதிய திட்டமாக கார்பன் உமிழ்வை பெருமளவு குறைக்கவும் தடுக்கவும் பல முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலை, ரிவர் சஃபாரி, நைட் சஃபாரி மற்றும் ஜுராங் பறவை பூங்காவில் உள்ள அனைத்து டிராம்களும் இந்த ஆண்டின் இறுதிக்குள் மின்சாரத்தில் இயங்கும் வண்ணம் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
WRS எனப்படும் சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கார்பன் உமிழ்வை முற்றிலும் தடுக்க இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையில் மொத்தமாக 30 ட்ராம்கள் மின்மயமாகவுள்ளது.
இதில் சிறப்பம்சமாக ஏற்கனவே மேற்குறிப்பிட்ட விலங்குகள் பூங்காக்களில் உள்ள 80 சதவிகித ட்ராம்கள் மின்சக்தியால் இயங்குவது குறிப்பிடத்தக்கது.
மேலும் WRS வெளியிட்ட தகவலில் வரும் 2025ம் ஆண்டிற்குள் WRS பயணப்படுத்தும் வேன்கள், லாரிகள், மற்றும் கயிறு டிராக்டர்கள் உள்ளிட்ட அதன் முழு உள் கடற்படையையும் மின்சாரமாக மாற்றுவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது.
மேலும் பூங்காக்களுக்கு வரும் ஷட்டில் பஸ் சேவைகளை இயக்கும் வெளிப்புற ஆபரேட்டர்களுடன் இணைந்து, அந்த பஸ்களையும் 2025ம் ஆண்டிற்குள் மின்சாரம் மூலம் இயக்க ஆவணம் செய்து வருகின்றது.