TamilSaaga

அமலாக்க அதிகாரிகளை தகாத வார்த்தைகளில் பேசிய நால்வர் ? – போலீசார் கிடுக்குபிடி விசாரணை

சிங்கப்பூரில் பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் மற்றும் அமலாக்க அதிகாரிகளை தகாத வார்த்தைகளில் பேசி துன்புறுத்தியதாக நம்பப்படும் நான்கு பேர் மீது காவல் துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

33 முதல் 47 வயதுக்கு இடைப்பட்ட அந்த நான்கு நபர்கள் நான்கு வெவ்வேறு சம்பவங்களில் தொடர்பு உள்ளவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த மே 31-ஆம் தேதி பெடோக் மால் கடைத்தெருவில் பாதுகாப்பு இடைவெளி தூதர் ஒருவரை 47 வயது ஆடவர் தகாத வார்த்தைகளினால் திட்டி துன்புறுத்தியதும்.

மேலும் அந்த அதிகாரியை அந்த ஆடவர் வயிற்றில் குத்தியதாகவும் காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதேபோல மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த குற்றங்களில் குற்றவாளியாகக் கருதப்படும் 4 பேர் மீது தொடர் விசாரணை நடந்து வருகிறது.

ஆல்பர்ட் சென்டரில் உள்ள உணவங்காடியில் முக கவசத்தை முறையாக அணியாத ஆடவரை கேள்விகேட்ட அமலாக்க அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டியவர் மீது விசாரணை நடந்து வருகின்றது.

Related posts