TamilSaaga

சிங்கப்பூரில் புதிதாக 18 பேருக்கு தொற்று – 5 பேர் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று (ஜீன்.22) மதியம் வரையிலான தகவலில் சுமார் 15 பேர் சமூக தொற்றின் அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10 பேர் ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர்கள். அதில் 3 பேர் ஏற்கனவே தனிமைபடுத்தலில் இருந்தனர் மற்றும் 7 பேர் கண்காணிப்பு பரிசோதனையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

தற்போது மீதமுள்ள 5 பேர் இதற்கு முன்பு பாதிக்கப்பட்ட எந்த நபரின் தொடர்பும் இல்லாமல் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது.

மேலும் 3 வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள். அவர்கள் வருகைக்கு பிறகு தங்குமிடம் அல்லது சிங்கப்பூரில் தனிமைபடுத்தப்பட்டனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் புதிதாக தொற்றால் பாதிக்கப்படவில்லை.
மொத்தமாக சிங்கப்பூரில் 18 பேர் இன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் புதிதாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில், வேலை ஆதரவுத் திட்டம் – இம்மாதம் 30ம் தேதியிலிருந்து சுமார் 140,000க்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு 2.2 பில்லியன் வெள்ளி நிவாரண நிதி வழங்கப்படும் – நிதியமைச்சும்

Related posts