வெளிநாட்டு ஊழியருக்கு அவர் பணியிடங்களில் விபத்து ஏற்படுவது சிங்கப்பூரில் சாதாரணமாகவே நடந்து வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் விபத்து ஏற்பட்டால் எப்படி இழப்பீடு வாங்கலாம் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வேலை செய்யும் இடங்களில் விபத்து ஏற்பட்டால் இரண்டு வழிகளில் உங்களால் இழப்பீடு கோர முடியும். முதலாவது Work Injury Compensation Act(WICA). இரண்டாவது நீதிமன்றத்தில் போடப்படும் வழக்கின் மூலம் பெறலாம்.
WICA விதிப்படி பணியிடத்தில் விபத்து நடக்கும் போது மூன்று அம்சங்களை வைத்து உங்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படும். விபத்து பெரிதாக இருந்து உங்களுக்கு ஏற்படும் நிரந்தர பாதிப்புக்கான இழப்பீடு துவங்கி விபத்து சிகிச்சைக்கான செலவுகள் கூட கொடுக்கப்படும். உங்களுக்கு மருத்துவ விடுமுறையில் இருக்கும் போது ஊதியங்களும் இழப்பீடாக தரப்படும்.
அதுவே வழக்கின் மூலம் இழப்பீடு பெற நீங்கள் நினைத்தால் அதற்கு தவறு யார் மீது என்பதை நிரூபிக்க வேண்டும். நிறுவனம் அல்லது மூன்றாம் தரப்பின் கவனக்குறைவால் நடந்ததா என்பதை நிரூபிக்க வேண்டும். மருத்துவ செலவுகள், நிரந்த இழப்பால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் ஆகியவை குறித்தும் நீதிமன்றங்களில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இந்த விபத்தில் உங்க மொபைல் போன் உடைந்து விட்டது என நிரூபித்தால் கூட அதற்கு நிவாரணம் வழங்கப்படும்.
எங்கு WICA வை தேர்வு செய்யலாம்?
WICA-ல் பொதுவான சட்டத்தின் கீழ் ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்ய விரும்பாத ஊழியர்கள் பணியிடங்களில் ஏற்படும் காயங்கள் அல்லது நோய்களுக்கான இழப்பீட்டை பெற்று தரும். இதன் மூலம் பெறப்படும் இழப்பீடு குறைவாக இருக்கும். ஆனால் 6 மாதங்களில் உங்களுக்கு இழப்பீடு கிடைத்து விடும்.
எப்பொழுது வழக்கு போடலாம்?
நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களுக்கான பாதுகாப்பு கருவிகள் கொடுக்காமல் ஏற்பட்ட விபத்து, தேவையான ஆட்களை வேலைக்கு பணியமர்த்தாமல் ஏற்பட்ட விபத்துக்களுக்கு உங்க நிறுவனத்தின் மீது வழக்கு தொடரலாம். டிராபிக்கில் யாரும் உங்களை இடித்து அதனால் ஏற்படும் காயங்களுக்கும் வழக்கு தொடரலாம்.
ஆனால் இதற்கு கால அவகாசம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த இழப்பீடுக்கு நீங்கள் காத்திருக்கும் போது இரண்டு விஷயங்கள் உதவக்கூடும். உங்கள் இழப்பீடு அதிக காலம் எடுத்தால் உங்களுக்கு இழப்பீட்டிற்காக வட்டியும் சேர்த்து கொடுக்கப்படும். அதிக காலம் எடுக்கும் போது இடைக்கால நிவாரணம் விண்ணப்பிப்பதின் மூலம் நடுவிலேயே உங்களால் பணத்தினை பெற முடியும்.
WICAவிற்கு யார் தகுதியானவர்?
wica-ன் கீழ் வேலையில் இருக்கும் ஊழியரோ, பயிற்சியில் இருப்பவரோ இழப்பீடு வாங்கலாம். சொந்த தொழில் செய்தால், வீட்டு வேலைகளில் இருப்பவர்களுக்கு wica தலையீடாது.
பணியடத்தில் நடக்கும் காயங்கள், வேலைக்கு செல்லும் வாகனங்கள் மூலம் ஏற்படும் விபத்துக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். உங்க சொந்த பிரச்னைக்காக சண்டையிட்டாலோ, உங்க தனிப்பட்ட பயணங்களின் போதோ ஏற்படும் விபத்துக்கு இழப்பீடு கிடைக்காது.
பணியிடங்களில் காயம் ஏற்பட்டால் முதலில் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு உங்கள் காயம் குறித்து உடனே தெரிவிக்க வேண்டும். சிகிச்சைக்காக செல்லும் போது மருத்துவரிடம் பணியிடத்தில் காயம் எப்படி நிகழ்ந்தது என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
உங்க காயத்தை நிர்வாகத்திடம் சொல்லும் போது இது இங்கு ஏற்படவில்லை என்று அவர்கள் வாதிடக்கூடும். அப்படி நடக்கும் போது MOM-ல் ஒரு புகாரை கொடுக்கலாம். அதில் உங்களுக்கு முன்பே இந்த காயம் இல்லை என்பதை நிரூபியுங்கள். இதற்காக ஒரு வழக்கறிஞரை நியமிப்பது ஆக சிறந்தது.
விபத்து ஏற்படுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வரை சிகிச்சைக்கான பணத்தை நிர்வாகம் கொடுக்க வேண்டும். ஊழியர் கொடுத்திருந்தால் அதையும் திருப்பி கொடுக்க வேண்டும்.
இந்த விபத்தில் உங்களுக்கு நிரந்தரமாக உடல் ஊனம் நிகழ்ந்து விட்டது என்றால் நீங்கள் இரண்டு முறைகளில் இழப்பீடு கோரலாம். குற்றம் செய்தவரினை நிரூபிக்க முடியவில்லை என்றால் wicaன் கீழ் இந்த இழப்பீடு கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
உடல் ஊனத்தின் சதவீதத்தினை மருத்துவரை வைத்து செக் செய்யப்படும். அந்த சதவீதத்தினை வைத்து உங்களுக்கு கொடுக்கப்படும் நிவாரண தொகையை மாம் இணைத்தளத்தில் தெரிந்து கொள்ள முடியும். இதில் மருத்துவ செலவுகள் தனியாகவே $45000 டாலர் வரை கொடுக்கப்படும். சிகிச்சையில் இருக்கும் போது முதல் இரண்டு மாதங்கள் விடுப்புடன் கூடிய சம்பளம் கொடுக்கப்படும்.
மூன்றாவது மாதத்தில் இருந்து அடுத்த 10 மாதங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு சம்பளம் கொடுக்கப்படும். யார் மீது குற்றம் என்பதை உங்களால் நிரூபிக்க முடிந்தால் பொது சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம். wicaன் கீழ் விபத்துக்கு இழப்பீடு கோர 1 வருட காலமும், பொது சட்டத்தின் கீழ் 3 வருட காலம் அவகாசத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். சட்ட வழக்கில் வக்கீலுக்கு $6000 மட்டுமே செலவுகள் ஆகும். wicaல் பெரும்பாலும் வக்கீல்கள் தேவை படுவதில்லை.