TamilSaaga

“எதிர்கால மாமியாருக்கு மறக்கமுடியாத பரிசை கொடுத்த சிங்கப்பூர் பெண்” – சீன புத்தாண்டன்று சிலிர்த்துப்போன காதலன்

சிங்கப்பூரில் வசித்து வரும் மலேசியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தனது காதலின் தாயை கவர்வதற்காக இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு வாழ்த்துக்களைக் சீன மொழியில் கற்றுகொண்டு, அவரை அசத்திய சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தந்து TikTok கணக்கில் அந்த பெண் அக்காணொளியை பகிர்ந்த நிலையில் தற்போது அந்த வீடியோ 1,90,000 பார்வையாளர்களை பெற்று அசத்தி வருகின்றது.

“இனி எந்த கவலையும் வேண்டாம்” : Changi Airportன் மூன்று புதிய முன்னெடுப்புகள்” : பயனடையப்போவது யார் தெரியுமா?

அந்த வீடியோவில், அமிரா ஒரு ஜோடி ஆரஞ்சு பழங்களுடன் தனது “எதிர்கால மாமியார்” என்று அவர் குறிப்பிடப்படும் தனது காதலனின் தாயை அணுகுவதைக் காணமுடிந்தது. ஏறக்குறைய சரியான மாண்டரின் மொழியில், அவர் சில சீனப் புத்தாண்டு வாழ்த்துக்களைச் தனது எதிர்கால மாமியாரிடம் “xin nian kuai le, gong xi fa cai, shen ti jian kang, cai Yuan Guang jin” என்று கூறினார். இதற்கு “உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், உங்களுக்கு செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வம் சேர வாழ்த்துக்கள்” என்று அர்த்தமாம்.

உடனே மனமகிழ்ச்சியில் மூழ்கிய அந்த காதலனின் தாய் அமிராவின் நல்வாழ்த்துக்களைத் பெற்றுக்கொண்டு, அந்த பெண்ணுக்கு பாரம்பரியமான சிவப்பு பாக்கெட்டை அளிப்பதற்கு முன்பு “நீயே சிறந்தவள்” என்று கூறி ஆசி வழங்கியுள்ளார். மேலும் உன் வாழ்வில் நீ நினைத்த உயரங்களை பெறவேண்டும் என்று வாழ்த்தினர். இதுகுறித்து பார்கிந்துள்ள அந்த பெண் வாழ்த்துக்களை மனப்பாடம் செய்ய மிகவும் கடினமாக முயற்சித்ததாகவும், இந்த ஆண்டு “இறுதியாக அதைச் செய்துமுடித்தேன்” என்றும் அமிரா மேலும் கூறினார்.

“இவரு தானா அந்த மச்சக்காரன்” : எல்லாரையும் காதலிச்சு தான் கல்யாணம் செய்தேன்! – 8 மனைவிகளோடு ஒரே வீட்டில் வாழும் ரியல் “ரோமியோ”

நான் தான் பெஸ்ட் என்று எனது எதிர்கால மாமியார் கூறியபோது சற்று கண்கலங்கினேன் என்றும் அவர் பகிர்ந்திருந்தார். பலர் தங்களுக்கும் இதுபோன்ற நிகழ்வு நடந்துள்ளது என்று கூற, பலரும் தங்களுடைய பதிவுகளில் அந்த பெண்ணை வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஒரு மொழியை கற்றுக்கொள்வது என்பது ஒருபுறம் இருந்தாலும் அந்த காதலன் மற்றும் தனது எதிர்கால மாமியாருக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியது தான்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts