TamilSaaga

“சிங்கப்பூர் 6G போன்ற உயர் தொழில்நுட்பத்தில் நிச்சயம் முதலீடு செய்யும்” – அமைச்சர் லாரன்ஸ் வோங் உறுதி

நமது சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று வெளியான பட்ஜெட் 2022ல் புதிய திறன்களில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார். வோங்கின் கூற்றுப்படி, சிங்கப்பூரின் டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்துவதே அதன் முதல் முன்னுரிமை என்றார் அவர். சிங்கப்பூர் உலகில் மிகவும் இணைக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகவும், 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்திய முதல் நகரங்களில் ஒன்றாகவும் இருந்ததை வோங் குறிப்பிட்டார்.

“குறைந்த ஊதிய தொழிலாளர்களுக்கு கூடுதல் ஆதரவு” : 5 ஆண்டுகளில் 9 பில்லியன் செலவழிக்க திட்டம் – சிங்கப்பூர் பட்ஜெட் 2022

இந்நிலையில் “எதிர்கால தேவைகளை” பூர்த்தி செய்ய மேலும் முதலீடு செய்வோம் என்று வோங் கூறினார். அடுத்த சில ஆண்டுகளில் பிராட்பேண்ட் அணுகல் வேகத்தை பத்து மடங்கு அதிகரிக்க பிராட்பேண்ட் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டமும் இதில் அடங்கும் என்றார். அடுத்தபடியாக 6G போன்ற எதிர்கால தொழில்நுட்பத்திலும் நாங்கள் முதலீடு செய்வோம் என்று வோங் கூறினார்.

சிங்கப்பூரில் அதிகம் சம்பாதிப்பவர்கள் “உச்” கொட்ட வைக்கும் அறிவிப்பு.. 2022 பட்ஜெட்டின் வரி மாற்றங்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்

ஆனால் அத்தகைய வேகத்திற்கான பயன்பாட்டு நிகழ்வுகள் இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாயும் அவர் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் மெய்நிகர் ரியாலிட்டி கருவிகளுக்கான பல சாத்தியக்கூறுகளை வோங் சுட்டிக்காட்டினார். வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் திறன்களை உருவாக்கும் திட்டங்களை மேம்படுத்த அடுத்த சில ஆண்டுகளில் கூடுதலாக S$200 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் வோங் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts