TamilSaaga

தனிமைப்படுத்துதலில் இருந்த நண்பர் ; தடுப்புக்காவலை மீறி சந்தித்த ஆடவருக்கு அபராதம்

சிங்கப்பூரில் விதியை மீறி தனிமைப்படுத்துதலில் இருந்த தனது நண்பரை சந்திக்க சென்ற ஆண்டவருக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. சௌ கைசர் என்ற அந்த 20 வயது வாலிபர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி தடுப்புக்காவலை மீறி ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்துதலில் இருந்த தனது நண்பரை காண சென்றுள்ளார் என்றும் அந்த அறையில் அவர் சுமார் 1 மணிநேரத்தை கழித்துள்ளார் என்றும் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த நபர் மீண்டும் அந்த ஹோட்டலில் இருந்து வெளியேறும்போது ஹோட்டலின் பாதுகாப்புக் காவலர் அவரை பார்த்ததாகவும். ஆனால் அவர் தடுத்து நிறுத்தப்படும் முன்பே அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தொற்று எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல முன்களப்பணியாளர்கள், போலீசார், மருத்துவர்களின் தியாகத்தால் தான் தற்போது தொற்றின் அளவு குறைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அஜாக்கிரதையாக பலர் செய்யும் சிறு தவறினால் மீண்டும் நாட்டில் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது என்பது குறிபிடத்தக்கது.

இந்நிலையில் தடுப்புக்கவலை மீறி தனிமைப்படுத்துதலில் இருக்கும் ஒருவரை சென்று சந்தித்த குற்றத்திற்காக 6 மாத சிறை தண்டனை அல்லது 10,000 டாலர் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related posts