TamilSaaga

“சிங்கப்பூரில் சமீபத்திய ஆதரவு நடவடிக்கைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை” – MOF அளித்த தகவல்

பெருந்தொற்று பரவல் தொடங்கிய காலம் முதல் நமது சிங்கப்பூர் மட்டுமல்லாமல் உலக அளவில் வளர்ந்த பல நாடுகளே கதிகலங்கிப்போயுள்ளன என்றால் அது மிகையல்ல. காரணம் இந்த தொற்று மக்களை பாதிப்பதோடு நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்து வருகின்றது. உலகின் பல திசைகளில் உள்ள சின்னச்சிறு நாடுகள் பல, செய்வதறியாது தவித்து வருவதை நம்மால் கேள்விப்பட முடிகிறது. இந்நிலையில் இந்த பெருந்தொற்று நமது சிங்கப்பூரின் பொருளாதாரத்திற்கு கடும் சவாலாக இருந்து வருகின்றது.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் சிங்கப்பூரின் நிதியமைச்சகம் பல சலுகைகளை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது கடந்த செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 24 வரை, உறுதிப்படுத்தல் கட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு சமீபத்திய ஆதரவு நடவடிக்கைகள் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது சில தகவல்களை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அமைச்சகத்தின் முகநூல் பதிவில் வெளியான தகவலின்படி..

“நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள இறுக்கமான நடவடிக்கைகளால், கணிசமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு செப்டம்பர் 27 2021 முதல் அக்டோபர் 24 2021 வரை வேலை ஆதரவு திட்ட ஆதரவு 25% ஆக உயர்த்தப்பட்டது.” “உணவு பாண கடைகள், திரையரங்கம், மியூசியம், கலை காட்சியகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், சுற்றுலா துறை ஆகியவை இதில் அடங்கும்.” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. “ஹேக்கர் மையம் மற்றும் சந்தைகள் உள்ளிட்ட அரசுக்கு கடன்பட்ட வணிக சொத்துக்களில் தகுதியுள்ள குத்தகைதாரர்களுக்கு 2 வார வாடகை தள்ளுபடி”.

“ஏற்கனவே டாக்ஸி மற்றும் தனியார் கார் ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதி செப்டம்பர் 27 2021 முதல் அக்டோபர் 24 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது

Related posts