சிங்கப்பூர் TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் இரண்டாவது குலுக்கல் இன்று நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு இதற்கான குலுக்கல் நடைபெறுகிறது.
இதில், முதல் பரிசாக $1,000,000 சிங்கப்பூர் டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ஐந்தே முக்கால் கோடிக்கும் மேல்.
எனினும், Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
முன்னதாக, TOTO லாட்டரியில் கடந்த அக்.17 அன்று நடைபெற்ற இந்த வாரத்துக்கான முதல் குலுக்கலில் முதல் பரிசான $11, 120, 927 சிங்கப்பூர் டாலர்கள் தொகையை இருவர் வென்றனர். இதையடுத்து இருவரும் இந்த தொகையை சமமாக பங்கிட்டு எடுத்துக் கொண்டனர். அதன்படி இருவருக்கும் தலா $5, 560, 463 சிங்கப்பூர் டாலர்கள் கிடைத்தது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 32 கோடியை வென்றனர்.
அதேபோல், Group 2 எனப்படும் இரண்டாவது பரிசான $74,361 சிங்கப்பூர் டாலரை 16 நபர்கள் வென்றனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் குலுக்கல் நடைபெறவுள்ளது. லாட்டரி என்பது முழுக்க முழுக்க அதிர்ஷ்டம் சார்ந்தது மட்டுமே. எனவே, லாட்டரி சீட்டு வாங்குவதையே வாடிக்கையாக வைத்திருக்காமல் உழைப்பில் கவனம் செலுத்தும்படி வேண்டுகிறோம். மாதத்திற்கு 1 லாட்டரி சீட்டு என்பதே போதுமானது. வாராவாரம் வாங்குவது என்பது உங்கள் பணத்தை தான் வீணடிக்குமே தவிர, வேறு எந்த பயனும் இல்லை.
எனினும், இந்த செய்தியை படிக்கும் உங்களில் யாரேனும் லாட்டரி வென்றால், அதில் ஒரு சிறு தொகையை ஆதரவற்றோருக்கு பங்களிக்கும் படி வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.