TamilSaaga

எனக்கு ராசியே இல்லனு தான் நினைச்சேன்… TOTO என் வாழ்க்கையையே மாத்திட்டு… ஒரே குலுக்கலில் 34 கோடி வென்ற சிங்கப்பூர் ஊழியர்

சிங்கப்பூரில் லாட்டரி விற்பனை அதிகாரப்பூர்வமான ஒன்று தான். பிரபலமான லாட்டரிகளில் ஒன்று தான் toto. இந்த லாட்டரி வாரம் இருமுறை குலுக்கப்படும். திங்கள் மற்றும் வியாழன்கிழமை மாலை இந்த குலுக்கல் நடைபெற்று வருகிறது.

TOTO லாட்டரியில் கடந்த இரண்டு குலுக்கலிலும் முதல் பரிசு எனப்படும் group 1 யாருக்கும் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த வியாழன்கிழமை நவ.15ந் தேதி நடந்த குலுக்கலில் முதல் பரிசே பெரிய தொகையாக அமைந்திருக்கிறது. Group 1ன் வெற்றியாளருக்கு $5,602,898 சிங்கப்பூர் டாலர் பரிசாக கிடைத்திருக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 34 கோடி ரூபாயாக கணக்கிடப்படுகிறது.

எப்போதும் group 2வில் இரண்டு அல்லது மூன்று பேர் தான் வெற்றி பெற்று இருப்பார்கள். ஆனால் இந்த முறை Group 2ல் 7 $80,736 பரிசை தட்டி சென்றுள்ளனர். இது இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சமாக கணக்கிடப்படுகிறது. Group 3ல் $1,530 பரிசுத்தொகையை 254 பேர் பெற்றுள்ளனர்.

Group 4ல் $277 சிங்கப்பூர் டாலரை 767 பேர் பெற்றுள்ளனர். Group 5ல் $50 சிங்கப்பூர் டாலரை 14,038 பேர் பெற்றுள்ளனர். கடைசி பரிசுகளான Group 6 மற்றும் Group 7 ல் தலா $25 மற்றும் $10 சிங்கப்பூர் டாலர் பரிசாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

34 கோடி ரூபாய் பெரிய தொகையை பரிசாக பெற்ற சிங்கப்பூர் ஊழியர் Singapore Pools Lor 8 Toa Payoh Branchல் இந்த டிக்கெட்டை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு இந்த லாட்டரி வாங்கும் பழக்கம் பல காலமாக இருப்பதாகவும் தற்போது அந்த அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts