TamilSaaga

ஆறு அதிர்ஷ்ட எண்களும் நச்சுனு பொருந்தியிருக்கு.. அடித்தது S$11,49,738 ஜாக்பாட் – சிங்கப்பூர் TOTO Draw மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரரான “மச்சக்காரன்”

சிங்கப்பூரில் வாரம் இரண்டு முறை நடக்கும் toto drawவிற்கான குலுக்கல் நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடந்தது. S$11,49,738 என்ற குரூப் 1 பரிசுடன் குலுக்கல் துவங்கியது. பொதுமக்கள் மற்றும் toto draw நிறுவன ஊழியர்கள் முன்பு இந்த குலுக்கல் நடைபெற்றது.

1,2,25,33,36,40 ஆகிய 6 அதிர்ஷ்ட எண்கள் இந்த முறை வெற்றி எண்களாக அறிவிக்கப்பட்டது, இதில் இந்த 6 எண்களையும் சரியாக வாங்கிய வெற்றியாளர் ஒருவர் குரூப் 1 ஜாக்பாட் பரிசான S$11,49,738 (இந்திய மதிப்பில் 6.6 கோடி) வென்று ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

குரூப் 2 பரிசான S$2,42,050யும் ஒரே ஒரு நபரால் வெல்லப்பட்டது, இவர் 1,2,25,33,36,40 என்ற அதிர்ஷ்ட எண்ணில் இருந்து 5 எண்ணையும் கூடுதல் அதிர்ஷ்ட நம்பரான 7லையும் பெற்று இரண்டாம் பரிசை தட்டிச்சென்றார். எனவே இந்த முறை குரூப் 1 மற்றும் குரூப் 2 பரிசுகள் முழுமையாக வெல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் இரண்டு “அன்னை தெரசா”.. வேலையை செஞ்சா சாப்பாட்டில் கைவைக்க முடியாது.. சகிப்புத்தன்மையின் உச்சம்! – சிங்கையின் ஒவ்வொரு ஆண்களின் சார்பாக “Royal Salute”

இனி அடுத்த குலுக்கல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான குரூப் 1 பரிசு தொகை சுமார் S$10,00,000 என்று toto draw நிறுவனம் அறிவித்துள்ளது.

லாட்டரியில் ஜெயிப்பது என்பது முழுக்கமுழுக்க அதிர்ஷ்டத்தை மட்டுமே சார்ந்தது என்பதால் லாட்டரி வாங்குபவர்கள் கணவத்துடன் இதை விளையாட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts