அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை மிகவும் தொன்மைவாய்ந்த நாடுகளில் ஒன்றாகத்தான் இன்றளவும் பலரால் வியந்து பார்க்கப்படுகிறது. நமது சிங்கப்பூருக்கு நட்பு நாடாகவும் திகழ்ந்து வரும் இந்தியாவை சுற்றிலும் பல புகழ்மிக்க வழிபாடு தளங்கள் நிறைந்துள்ளன. அங்குள்ள உள்ள பல நகரங்கள் கோவில் நகரம் என்று அழைக்கப்படுவதை நாம் கேட்டிருப்போம். இந்நிலையில் நமது சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற திருத்தலமான திருப்பதிக்கு செல்ல விமான சேவை துவங்கப்படவுள்ளது.
இதுகுறித்து Trichy Aviation என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியான தகவலில் “திருப்பதி இப்போது சிங்கப்பூர் வாழ் மக்களுக்கு மிக அருகில் திருச்சி வழியாக. “சிங்கப்பூர் – திருப்பதி” & “திருப்பதி – சிங்கப்பூர்” இரு வழித்தடத்திலும் 30+7 கிலோ லக்கேஜ், ஒரே PNRல். அதிக விபரங்களுக்கு சிங்கப்பூர் இண்டிகோ அலுவலகத்தை அணுகவும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் இனி சிங்கப்பூரில் இருந்து திருப்பதி செல்ல விரும்பும் மக்கள் சிங்கப்பூரில் இருந்து திருச்சி மார்க்கமாக வரும் ஜனவரி 18ம் தேதி முதல் செல்லலாம். Indigo விமான சேவை நிறுவனம் இந்த சேவையை அளிக்கவுள்ளது. ஜனவரி 18ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் ஒவ்வொரு செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த சேவை இயக்கப்படவுள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில் 6E 35 என்ற விமான சேவை மூலம் சிங்கப்பூரில் இருந்து காலை 4.25 மணிக்கு Indigo விமானம் புறப்பட்டு காலை 6.05 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். அதேபோல 6E 7068 என்ற Indigo விமானத்தின் மூலம் திருச்சியில் இருந்து மாலை 6.40க்கு விமானம் புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருப்பதி சென்றடையும். அதே போல 6E 7067 என்ற Indigo விமானம் மூலம் மாலை 5 மணிக்கு திருப்பதியில் இருந்து விமானம் புறப்பட்டு மாலை 6.20க்கு திருச்சி சென்றடையும். அதன் பிறகு 6E 37 என்ற விமானம் மூலம் இரவு 8.40 மணிக்கு திருச்சியில் இருந்து விமானம் புறப்பட்டு அதிகாலை 3.25 மணிக்கு சிங்கப்பூர் வந்தடையும்.