TamilSaaga

30 வருடங்களுக்கு முன்பு 80 to 90-களில் தீபாவளி எப்படி இருந்தது??

அப்பாவிற்கு தீபாவளி லோன் சாங்சன் ஆகி விட்டது. என்ற அம்மாவின் மந்திரச் சொல்லை கேட்டதில் ஆரம்பிக்கும் எங்களது தீபாவளி பண்டிகை.

வீடுகளில் பொருளாதார சிக்கணம் காரணமாக ஒரே கலர் துனி எடுத்து அப்பாவிற்கு வேண்டிய டெய்லரிடம் மட்டுமே தைக்க கொடுக்க வேண்டும்.

வளரும் பையன்கள் என்ற அடைமொழிக்காக கோமாளிகள் போடுவது மாதிரி தொளபுளா பேண்ட், சட்டை , தைத்து தருவார் அப்பாவின் அந்த ஆஸ்தான டெய்லர் மாமா.

பென் பிள்ளைகள் என்றாலே பாவாடை தாவணி தான்.. அதில் பிரில் எனப்படும் லேஸ் வைத்து தைத்து தந்து விட்டால் ஏதோ புதையலே கிடைத்தது போல்.

புதுப்படங்கள் போவதற்கு நமக்கு பர்மிஷனும் இருக்காது, துட்டும் இருக்காது. அதனால் படம் பார்த்து விட்டு வந்த பெரிய அண்ணன்மார்களிடம் கதை கேட்டு ரசிப்போம்.. அதை விட கொடுமை அவர்களது சொந்த சொருகல்களையும் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

ஒரே ஒரு சீனிவெடி அல்லது ஓலை வெடி பாக்கெட்டை அண்ணன், தம்பிகளுக்குள் பங்கு பிரித்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி வெடித்தது – நினைவில் இருக்கிறது..!!

தெரு தெருவாக சென்று வெடிக்காத வெடிகளை பொறுக்கி வந்து புதுரக வெடிகளை தானாக தயார் செய்தது – நினைவில் இருக்கிறது..!!

வெடிமருந்து அப்பிய கையோடு சாப்பிட அமர்ந்து அம்மாவிடம் அடி வாங்கியது – நினைவில் இருக்கிறது..!!

பேப்பரில் வெடி மருந்துகளை மொத்தமாக சேர்த்து கொளுத்தும்போது ஏற்பட்ட தீக்காயம் – நினைவில் இருக்கிறது..!!

தீபாவளிக்கு முந்தைய இரவு வரை தைக்க கொடுத்த துனிகள் வீடு வந்து சேரும் வரை எங்களது நிலை.

வெடி வாங்கி வரும் அப்பாவின் வருகைக்காக வாசலில் வந்து வந்து எட்டிப் பார்த்து சென்றது – நினைவில் இருக்கிறது..!!

காலையிலேயே தலைக்கு காய்ச்சிய என்னை வைத்து புலி அல்லது யானை மார்க் சீயக்காய் பொடி தேய்த்து குளிப்போம்..

பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை சட்னி, மிளகாய் பொடி கூடவே தீபாவளி பலகாரங்கள். மட்டன் சிக்கன்லாம் பெரிய இடத்து சமாச்சாரங்கள்.

வெடிகளை கையில் பிடித்து எரிந்து பெரியவர்களிடம் திட்டு வாங்கியது – நினைவில் இருக்கிறது..!!

அண்ணே வெடி இருக்கு, அக்கா வெடி இருக்கு என்று ரோட்டில் நடந்து வருபவர்களை ஓரமாக நடக்க வைத்து பயமுறுத்தியது – நினைவில் இருக்கிறது..!!

பிடித்த ஆடைகளை வாங்க முடியாமல் விலை குறைவான ஆடைகளை வாங்கி, அப்பா அம்மாவிடம் கோபித்துக் கொண்டது – நினைவில் இருக்கிறது..!!

இன்னமும் 20 நாள் இருக்கிறது, இன்னமும் 10நாள் இருக்கிறது என தீபாவளியின் வருகைக்காக நாட்களை எண்ணியது – நினைவில் இருக்கிறது..!!

அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா என அனைவரிடம் சேகரித்த தீபாவளி காசை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து செலவு செய்தது – நினைவில் இருக்கிறது..!!

தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது புத்தாடைகளை அணிந்து சென்று பந்தா காட்டியது – நினைவில் இருக்கிறது..!!

அம்மா ஒளித்து வைத்த பண்டங்களை யாருக்கும் தெரியாமல் திருடித் திண்றது – நினைவில் இருக்கிறது..!!
.
ஊதுபத்தி”க்கு பதிலாக கொசுபத்தியை கொளுத்தி வெடிகளை வெடித்தது – நினைவில் இருக்கிறது..!!

ஒரு மத்தாப்பு அனையப் போகிறது என்று தெரிந்ததும் இன்னொரு மத்தாப்பை அதிலேயே ஒட்டி வைத்து எரிய வைத்தது – நினைவில் இருக்கிறது..!!

பாம்பு மாத்திரைகளை வரிசையாக அடுக்கி மாடர்ன் ஆர்ட் போல கொளுத்தியது – நினைவில் இருக்கிறது..!!

வெடிக்காத லட்சுமி வெடிக்குள் சீனி வெடியை சொருகி பில்டப் செய்தது – நினைவில் இருக்கிறது..!!

தேங்காய் சிரட்டைகளில் வெடிகளை அமுக்கி வைத்து வெடித்தது – நினைவில் இருக்கிறது..!!
அப்போதெல்லாம் ராக்கெட் வெடி மட்டும் தான். பாட்டிலில் வைத்து ராக்கெட் வெடியை அனுப்புவார்கள்.
அதுவும் பனக்காரர்களின் வெடியாக மட்டுமே இருந்தது.

மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆங்காங்க வெடிக்கும் வானவேடிக்கைகளை பார்த்து கைதட்டி ரசித்தது – நினைவில் இருக்கிறது..!!

வெடி பாக்கெட்களை கையில் பிடித்துக்கொள்ள அசிஸ்டென்ட்டை வைத்தது – நினைவில் இருக்கிறது..!!

முப்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் கொண்டாடிய தீபாவளியை இப்போதைய சிறுவர்களும் இளைஞர்களும் கண்டிப்பாக கொண்டாட முடியாது..!!

இப்போதைய தீபாவளி குடிப்பதற்கும், டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், புதிய படம் பார்ப்பதற்கு மட்டுமே..!!

ஆனால் எங்களுடைய நாட்கள் (அப்போதைய 80,90,களின் தீபாவளி ) என்றும் காலத்தால் மறக்க முடியாதவை!

Content Credit – Facebook

Related posts