TamilSaaga

சிங்கப்பூர் Tiong Bahru food court… அருகில் பாத்ரூம் இருந்தும் பாட்டிலில் சிறுநீர் கழித்த சிறுவன் – Photo-வால் சிக்கிய பெண்மணி

SINGAPORE: நேற்று (ஏப்.16) food court ஒன்றில் பாட்டிலில் சிறுநீர் கழித்த சிறுவனின் புகைப்படமும், அவனுக்கு உதவி செய்த பெண்ணின் புகைப்படமும் “COMPLAINT SINGAPORE” பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.

சிங்கப்பூரின் Tiong Bahru food court-ல் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அந்த புகைப்படத்தில் சிறுவன் ஒரு நாற்காலியில் ice kacang கிண்ணத்துடன் நின்று கொண்டிருக்க, அப்படியே பாட்டிலில் சிறுநீரும் கழித்துக் கொண்டிருந்தான்.

அதுமட்டுமின்றி, ஒரு நிமிடம் எழுந்து நடந்து சென்றால் அருகாமையில் தான் கழிப்பறை உள்ளது என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாரத்திற்கு குறைந்தது 4 பூனைகள்.. தொடர்கதையாக மாறியுள்ள “Glue Traps”.. மிருங்களுக்கு இந்த ரண வேதனை வேண்டாம் – சிங்கப்பூரர்களுக்கு SPCA கோரிக்கை

இதையடுத்து இந்த பதிவு பேஸ்புக்கில் 1,000 க்கும் மேற்பட்ட எதிர்வினைகளையும், பகிர்வுகளையும் பெற்றுள்ளது.

சிலர் இந்த சம்பவத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிட்டுள்ளார். அதில், “சிறுவனும் அந்த பெண்மணியும் எழுந்து கழிவறைக்கு சென்று வருவதற்குள், அவர்களது இடம் பறிபோயிருக்கலாம். அதனால் அவர்கள் பாட்டிலில் சிறுநீரை பிடித்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், மற்றவர்கள் இது சுகாதாரமற்றது என்றும், குழந்தைக்கு தவறான வழியில் கற்பிக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts