சிங்கப்பூர் சிராங்கூன் ரோடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில், இன்று மதியம் வாழை இலை விருந்து நடைபெற்றது.
இதில், 3 dormitories-களைச் சேர்ந்த சுமார் 100 ஊழியர்கள் வாழையிலை விருந்தை சுவைத்தனர். சிலேத்தார் ஃபாஸ்ட், பிபிடி லாட்ஜ் 1பி, ஏவரி லாட்ஜ் ஆகிய dormitories-களில் இருந்து காலை 11 மணியிலிருந்து வரத் தொடங்கிய ஊழியர்கள், ஆலய தரிசனம் செய்துவிட்டு பின் மதிய உணவை சாப்பிட்டனர்.
சாம்பார், கீரை, கிழங்குப் பொறியல், அப்பளம் உள்ளிட்ட பண்டங்கள் பரிமாறப்பட்டன. இதில் பாதுகாப்பு இடைவெளிகள் மிக கவனமாக கடைபிடிக்கப்பட்டது.
பெருந்தொற்று காரணமாக 2020 முதல் dormitories-களில் அடைந்து கிடந்த வெளிநாட்டு ஊழியர்கள், கடந்தாண்டின் பிற்பகுதியில், சில கட்டுப்பாடுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்களால் தாங்கள் விரும்பிய நேரத்தில் வெளியே செல்ல முடியாது. இன்னமும் அதே நிலை தான் நீடிக்கிறது.
இந்த சூழலில் தான் இந்த அருமையான நிகழ்வு ‘18 படிகள்’ எனும் சமூக சேவை குழுவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Image and Content Source: Tamil Murasu