TamilSaaga

சிங்கப்பூர் மாணவர்களுக்கு கட்டாய தடுப்பூசி? கொரோனாவுடன் வாழவேண்டிய சூழல் – கல்வித்துறை அமைச்சர்

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக கற்றல் மற்றும் கற்பித்தல் நடைமுறையானது மாறியுள்ளது. மாணவர்கள் இணையவழி மின்னிலக்க வகுப்புகளை பயன்படுத்தி அதற்கு ஈடுகொடுக்க தயாராகி உள்ளனர் என நம்புவதாக கல்வித்துறை அமைச்சர் திரு.சான் சுன் சிங் அவர்கள் கூறினார்.

சிங்கப்பூரில் தகுதியுள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவது கட்டாயமாக்கப்படலாம். இது கொரோனா நோய் கிருமியுடன் வாழப்பழகிகொள்ளும் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என அமைச்சர் தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவர்கள் மீண்டும் பள்ளியில் வகுப்பறைகளுக்கு திரும்பும்போது அவர்களின் இயல்பு வாழ்க்கை மீள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறினார்.

தற்போது அவசர கால பயண்பாட்டிற்கு உபயோகிக்கும் தடுப்பூசிகளின் பாதுகாப்பு தன்மையையும் விரைவாக தடுப்பூசியை செலுத்த மற்ற நாடுகளில் இருந்து வழிமுறைகளையும் ஆராய்ந்து வருவதாக கல்வித்துறை அமைச்சர் திரு.சான் குறிப்பிட்டுள்ளார்.

Related posts