தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் பிரபலமான விழாவில் ஒன்று தைப்பூசமாகும். பொதுவாகவே இந்நாளில் பக்தர்கள் பல ஊர்களில் இருந்தும் பால்குடம், விதவிதமான காவடிகள் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக முருகனுக்கு செலுத்தியும் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை மூலம் கோயிலுக்கு வந்தும் விழாவினை சிறப்பிப்பர். இந்த தைப்பூசம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் சிங்கப்பூரிலும் மிகப் பிரபலமாகும். சிங்கப்பூர் மக்கள் விரதம் இருந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து பால்குடம் மற்றும் காவடி ஆகியவற்றை எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.
இந்நிலையில் தைப்பூசம் கொண்டாடப்படுவதற்கான முழு விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாதம் தைப்பூசத் திருவிழாவானது ஜனவரி 25 ஆம் தேதி, வியாழக்கிழமை கொண்டாடப்படுகின்றது. எனவே, திருவிழாவானது ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஜனவரி 24ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோவிலில் இரவு 12.05 மணிக்கு விழா துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதால் அவர்கள் வகுக்கப்பட்ட பாதையில் வரிசையில் நின்று முருகனின் அருள் பெற வேண்டும் என அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது. தைப்பூசத்தன்று பால்குடம் எடுக்க விரும்பும் பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு வரவேண்டும் எனவும், சரியாக 1.30am மணிக்கு பால்குடம் புறப்பட்டு விடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவடி போன்றவற்றை ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பால்குடம் எடுத்த சிறிது நேரத்தில் அடுத்தபடியாக காவடி புறப்பட்டு விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவடி போன்றவற்றிற்கு ஏற்கனவே மக்கள் முன்பதிவு செய்துள்ளதால் அதற்குரிய டோக்கன் வழங்கப்பட்டிருக்கும். எனவே குறிப்பிட்டப்பட்டுள்ள நிற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. விழாவில் பங்குபெறும் அனைவருக்கும் அன்னதானம் ஆனது தைப்பூசமான 25ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மூன்று மணி வரை தண்டாயுதபாணி கோவிலில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் பேக் செய்யப்பட்டு பொட்டலமாக வழங்கப்படும் என எடுக்கப்பட்டுள்ளது. வேண்டுதல்களை நிறைவேற்ற விரும்புபவர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் புக் செய்ய வேண்டும்.
பால்குடம் எடுப்பதற்கு 20 டாலர் டிக்கெட் எனவும், பால் காவடிக்கு 40 டாலர் டிக்கெட் எனவும், தொட்டில் காவடிக்கு 40 டாலர் மற்றும் ரதக் காவடிக்கு 100 டாலர் டிக்கெட் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேண்டுதல்கள் நடைபெறும் பாதையான ஸ்ரீனிவாச பெருமாள் முதல் தண்டாயுதபாணி கோவில் வரையிலான பாதையில் பொதுமக்கள் ஆல்கஹால் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பக்தர்கள் முன்கூட்டியே வேண்டுதல் நடைபெற வேண்டிய இடத்திற்கு வந்தால் கூட்ட நெரிசல் இன்றி முறையாக விழாவினை நடத்தலாம் எனவும் வேண்டுதல் விடுத்துள்ளது. எனவே முறையாக வரிசையில் நின்று விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.