TamilSaaga

சிங்கப்பூர்.. வெளிநாட்டு தொழிலாளருடன் தனிமையில் இருந்த வீட்டு பணியாளர் – கையும் களவுமாக பிடித்த முதலாளி

சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தனது முதலாளியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். அவர் ஒரு ஆண் பார்வையாளருடன் (அவரும் ஒரு வெளிநாட்டுத் தொழிலாளி) இரவை ஒன்றாகக் கழித்தார் என்று கூறப்படுகிறது. வோங் என்ற அந்த முதலாளி கடந்த டிசம்பர் 21 அன்று Mothershipக்கு அளித்த தகவலில், அவரும் அவரது கணவரும் தங்கள் வீட்டில் அந்நியர் இருப்பதைக் கண்டறிந்ததும் உடனடியாக போலீஸை அழைத்ததாகவும், சில மணிநேரங்களில் ஏஜென்சிக்குத் திரும்பிச் செல்லும்படி வீட்டுப் பணியாளரை அனுப்பியதாகவும் கூறினார்.

என்ன நடந்தது?

32 வயதான வோங், தனது பணியாளர் வழக்கமாக காலை 6 மணிக்கே எழுந்து குடும்பத்திற்கு காலை உணவை சமைப்பார் என்று கூறினார். ஆனால் டிசம்பர் 8ம் தேதி காலை 7:30 மணி ஆகியும் வீட்டுப் பணிப்பெண் எழுந்திருக்கவில்லை என்றார் அவர். வீட்டு வேலை செய்பவர் அதிகமாக தூங்கியதாக கருதப்பட்டதால், வோங்கின் கணவர், வயது 34, அவரை எழுப்ப அவரது அறைக்குச் சென்றார். அப்போதுதான் அந்த வீட்டுப் பணிப்பெண் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்மேலும் கால்சட்டை அணிந்திருந்த ஒரு மனிதன் அவள் அருகில் படுக்கையில் இருப்பதையும் அவர் கண்டு திடுக்கிட்டார்.

இதையும் படியுங்கள் : “ரண வேதனை அனுபவித்து இறக்கும் விலங்குகள்”

அதன் பிறகு, யார் நீங்கள் என்று கேட்ட அவர் உடனடியாக போலீசாரை அழைத்தார். போலீசார் வந்தது அந்த இருவரும் தாங்கள் வீட்டின் உரிமையாளரின் அனுமதி இன்றி தான் உள்ளே ஒன்றாக வந்தோம் என்பதை ஒப்புக்கொண்டனர். மேலும் அந்த இருவரும் ஒன்றாகக் கழித்த முதல் இரவு இதுவல்ல என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக அவர் அந்த வெளிநாட்டு பணியாளரை தனது அறைக்கு அனுமதித்ததும், யாரும் அறியாதவண்ணம் காலை 4 மணிக்கு அவர் அந்த இடத்தைவிட்டு செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வீட்டுப் பணிப்பெண் கையும் களவுமாக பிடிபட்டபோது வோங் குடும்பத்தினரால் சுமார் மூன்று வாரங்கள் முன்பு தான் அவர் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது. அந்த குடும்பம் இந்த செயலை கண்டுபிடிக்காததற்குக் காரணம், வீட்டுப் பணியாளரின் அறை முற்றத்தில் அமைந்துள்ள பின் கதவுடன் அமைந்துள்ளது என்று வோங் கூறினார். அந்த கதவிலிருந்து தரை தளத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் இருந்தபோதிலும் வோங் குடும்பம் ஒருபோதும் அந்த கதவை பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த உதவியாளர் இரவு அந்த குடும்பம் தங்கள் அறைகளுக்குச் செல்லும் வரை காத்திருப்பார் என்றும், அனைவரும் அவர்களது அறைக்கு சென்றபின் அந்த கூட்டாளரை அவர் அழைப்பர் என்றும் வோங் கூறினார். அந்த மனிதனும் எப்படி வீட்டுக்குள் வந்தாரோ அவ்வாறே வெளியேறுவர் என்றும் அவர் கூறினார். வோங்கின் கூற்றுப்படி, இரண்டு வார விசாரணைகளுக்குப் பிறகு அவரது முன்னாள் வீட்டுப் பணியாளருக்கும் வெளிநாட்டுப் பணியாளருக்கும் எதிராக காவல்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த முடிவு அவரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts