TamilSaaga

சிங்கப்பூரில் புதிய ஆராய்ச்சி ஆய்வகம்.. Cisco-NUS துவக்க விழாவில் அமைச்சர் பேச்சு

சிங்கப்பூரில் எதிர்காலத்தில், சாலையில் சைக்கிள் ஓட்டுபவர்களும் வாகன ஓட்டிகளும் ஒருவருக்கொருவர் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதை கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு பகுப்பாய்வு செய்து அதன் மூலம் போக்குவரத்துக் கொள்கைகளை உருவாக்க இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான வயர்லெஸ் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி, மருத்துவமனைகளில் உள்ள கோவிட்-19 நோயாளிகளின் நடமாட்டத்தையும் சிறப்பாகக் கண்காணிக்க முடியும்.

சிங்கப்பூரின் டிஜிட்டல் மயமாக்கலை மற்றொரு படிக்கு நகர்த்தக்கூடிய, ஐந்து ஆண்டுகளில் $174 மில்லியன் மதிப்புள்ள இரண்டு புதிய ஆராய்ச்சி முயற்சிகளின் கீழ் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் சில இவை.

யுனைடெட் ஸ்டேட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) ஆகியவற்றின் கீழ் $54 மில்லியன் முதலீட்டில் ஒரு ஆராய்ச்சி ஆய்வகம் புதிய முயற்சியை உள்ளடக்கியது இந்த திட்டம்.

தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பொறியியல் நிறுவனமான ST இன்ஜினியரிங் நான்கு கூட்டாளர்களுடன் இணைந்து $120 மில்லியன் முதலீட்டைக் கொண்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) Cisco-NUS ஆய்வகத்தின் தொடக்க விழாவில் பேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் “நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மைகள் புதுமைகளைத் தூண்டுவதற்கும் புதிய வணிக மாதிரிகளை மறுவடிவமைப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும்” என தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற சிஸ்கோவின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு மேலும் பல நிறுவனங்களை அவர் ஊக்குவித்தார்.

புதிய துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பொருளாதார நிறுவன ஆய்வகமானது செயற்கை நுண்ணறிவு (AI), சுகாதாரம், இணைய பாதுகாப்பு, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பணியிட உற்பத்தித்திறன் பற்றிய ஆராய்ச்சியை அதிகரிக்கும்.

தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆதரவுடன், இது 17 தொழில்நுட்ப தீர்வுகள், 12 தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனறும் அவர் தெரிவித்தார்.

Related posts