சிங்கப்பூருக்கு சுற்றி பார்க்கவும், வேலை செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கானவர் வெளிநாட்டில் இருந்து வந்தவண்ணம் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விசாவின் அடிப்படையில் என்னென்ன Document-கள் தேவைப்படும் என்ற முக்கிய தகவல்கள்.
சிங்கப்பூருக்கு வரும் E-pass, S-pass, Student visa, Tourist visa, TEP, TWP ஆகிய விசாக்கள் வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான Document-கள் தான் கேட்கப்படுகிறது. அது என்னனென்ன தெரியுமா?
இந்த வகையை சேர்ந்த விசா வைத்திருப்பவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை சரி பார்த்து கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து குறிப்பிட்ட பயணத்திற்கான டிக்கெட் இருக்க வேண்டும். தடுப்பூசி போட்ட இண்டர்நேசனல் சர்டிபிகேட் வைத்திருக்க வேண்டும். அதில் இந்தியாவை போல இல்லாமல் சிங்கப்பூருக்கு உங்கள் தந்தையின் இன்ஷியல் இல்லாமல் முழு பெயரும் உங்கள் பெயருடன் இருக்க வேண்டும். அதுப்போல முதலில் தந்தையின் பெயர் வந்து அதன் பின்னரே உங்கள் பெயர் இருக்க வேண்டும். பிறந்தநாள் சரியாக இருக்க வேண்டும். வயது மட்டும் குறிப்பிடப்பட்டு இருக்க கூடாது.
இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு நம்பி அனுப்பும் பெற்றோர்.. பணத்தை வீணடிக்காமல் இருக்க “Best Choice” – S Pass, E Passஐ விட சிறந்தது Skilled Test
இதைத்தொடர்ந்து, ST arrival card எடுத்து வரவும். இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை தானே ஒழிய, ஆனால் கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து Construction, Shipyard மற்றும் Marine Sectorல் பணிபுரியும் ஊழியர்களுக்கு டாக்குமெண்டுகள் வேறு விதமாக இருக்கும். வொர்க் பெர்மிட்டில் இருந்து லீவில் சென்று வருபவர்களுக்கு ஒருவிதமாக Document-களும், புதிய விசாவுடன் வருபவர்களுக்கு ஒரு விதமான Document-களும் கேட்கப்படும்.
இதில் முதலாவதாக, இந்த குறிப்பிட்ட துறைகளில் புதிதாக சிங்கப்பூர் வருபவர்களுக்கு முதலில் விசா இருக்க வேண்டும். OnBoarding Slot கிடைத்த பிறகு டிக்கெட் போடுவது தான் சிறந்தது. ஆனால், இதுகுறித்து உங்கள் கம்பெனியுடன் பேசிக்கொண்டு டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள். மற்ற விசாவினரை போல போல நீங்களும் தடுப்பூசி முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும். ST arrival card வைத்திருக்க வேண்டும்.
லீவில் இருந்து வரும் ஊழியர்களுக்கு இது எதுவும் தேவைப்படாது. வரும்போது டிக்கெட், ST arrival card, தடுப்பூசி போட்ட சான்றிதழ் மட்டுமே போதுமானது. இதில் பர்மிட்டை கேன்சல் செய்து ஊருக்கு சென்று உடனே வேறு கம்பெனிக்கு வேலைக்கு வரும் ஊழியர்களுக்கும் புதிதாக வருபவர்களுக்கான முறையே செயல்படுத்தப்படும். இந்த Documentகளை நீங்கள் ஒன்றினை மிஸ் செய்து விட்டால் கூட உங்களால் சிங்கப்பூரில் எண்ட்ரியாக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.