உலகளவில் தடுப்பூசிகளை பெறுவது தற்போது எளிதாகிவிட்டது என்ற காரத்தினாலும், எல்லை கட்டுப்பாடு நடவடிக்கைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாலும் நமது சிங்கப்பூர் அரசு வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களுக்கான COVID-19 தடுப்பூசி திட்டங்களை (Vaccination Channel) இம்மாத இறுதியில் நிறுத்தும் என்று நேற்று மார்ச் 21ம் தேதி வெளியுறவு அமைச்சகம் (MFA) மற்றும் சுகாதார அமைச்சகம் (MOH) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Vaccination Channel என்றால் என்ன?
சிங்கப்பூர் அரசு, வெளிநாடுகளில் வசிக்கும் தனது குடிமக்கள் தங்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற நாடு திரும்புவதற்கு வசதியாக அவர்கள் SHN எனப்படும் வீட்டிலேயே இருக்கும் அறிவிப்பை வழங்குவதற்கு முன்னதாக அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடனே முதல் டோஸ் தடுப்பூசி பெற உருவாக்கப்பட்டது தான் Vaccination Channel
வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்கள் தங்கள் பெருந்தொற்று தடுப்பூசிகளைப் பெற சிங்கப்பூர் திரும்புவதற்கு வசதியாக இந்த, Vaccination Channels என்ற திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இனி என்ன மாற்றம்?
“வெளிநாட்டில் உள்ள சிங்கப்பூரர்கள் தாங்கள் தற்போது வசிக்கும் நாடுகளில் பெருந்தொற்று தடுப்பூசிகளைப் பெறுவதற்கான அணுகல் மேம்பட்டுள்ளது. மற்றும் சமீபத்திய மாதங்களில் வெளிநாட்டவருக்கான சிங்கப்பூரின் தடுப்பூசி சேனல்களுக்கான புதிய பதிவுகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதை நாங்கள் கவனித்தோம்” அதன் காரணமாகத்தான் இந்த திட்டம் தற்போது நிறுத்தப்படுகிறது என்று அமைச்சகங்கள் கூட்டாக வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் Vaccination Channelஐ பயன்படுத்த முன் பதிவு செய்தும் இன்னும் சிங்கப்பூர் திரும்பாமல் உள்ளவர்கள் இந்த மாத இறுதிக்குள் அதனை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சகங்கள் மேலும் தெரிவித்துள்ளது. இந்த Vaccination Channel திட்டம் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாடு திரும்பும் சிங்கப்பூரர்கள் தங்களுடைய வீட்டில் தங்குவதற்கான அறிவிப்பை (SHN) முடித்த பிறகு தான், நியமிக்கப்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு சென்று தங்கள் தடுப்பூசிகளை பெறமுடியும்.
மேலும் “சிங்கப்பூர் தற்போது பல இடங்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதைகளை (VTL) அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகவே இதன் மூலம் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற வெளிநாட்டில் உள்ள சிங்கப்பூரர்கள் தாயகம் திரும்பும்போது தங்களுடைய SHN அறிவிப்பை வழங்காமல் தடுப்பூசி மையங்களில் தங்கள் Booster தடுப்பூசிகளை பெறலாம். தடுப்பூசி போடப்படாத பயணிகளுக்கான தங்குமிட அறிவிப்பு காலமும் ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் நியமிக்கப்பட்ட ஹோட்டல்களுக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட வசிப்பிடத்தில் தங்கள் SHN அறிவிப்பை வழங்கலாம் என்று MFA மற்றும் MOH தெரிவித்துள்ளது.